பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
நடந்தது. உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வரும் நவம்பர் 7ம்
தேதி முதல், 28ம் தேதி நடக்கிறது.
இப்போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான
தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை எதிர்த்து நார்வே நாட்டைச் சேர்ந்த
மாக்னஸ் காரல்சன் விளையாடுகிறார். சதுரங்கப் போட்டியை பிரபலப்படுத்தி,
விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தமிழக அரசு 55
ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி, சதுரங்கக் கழகம்
சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி துவக்க விழா கடலூர்
பெரியார் கலைக் கல்லூரியில் நேற்று நடந்தது.
கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், சுற்றுலாத் துறை அதிகாரி தமிழரசி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். 9 வயது, 11, 13, 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் ஓபன் பிரிவில் போட்டிகள் நடந்தது. போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். நாளை (29ம் தேதி) வரை போட்டிகள் நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு அன்றைய தினம் பரிசு வழங்கப்படும். போட்டி ஏற்பாடுகளை சதுரங்கக் கழக மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.