கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கக் கோரி வாயில் முழக்கப் போராட்டம்
கடலூர்:
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கக் கோரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 19/09/2013 (வியாழக்கிழமை) அன்று வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 26க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகள் உள்ளது. 3,600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை காரணமாக கல்லூரியில் இரண்டு சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. மாணவர், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இதனால் அரசு குறைந்த ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியார் கலைக் கல்லூரியில் 63 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 37 பேர் புதியவர்கள்; மற்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.
1. ஊதியமின்றி பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
2. பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும்.
3. பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த அடிப்படை ஊதியம் ரூ.15,600-ஐ வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த வாயில் முழக்க போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
கௌரவ விரிவுரையாளர்கள் 37 பேர் வேலைநிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை 2-வது சுழற்சி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக