கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் 16/09/2013 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்றது.
விழாவில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் மேலும் பேசியது:
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் கூடுதல் பாடப் பிரிவுகளைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், கடலூர் பெரியார் கல்லூரியில் கூடுதலாக 2 இளங்கலை பாடப் பிரிவுகளும், ஒரு முதுகலை பாடப் பிரிவு, ஆராய்ச்சி மேற்படிப்பு என மொத்தம் 13 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் அளித்துள்ள இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக உருவாகவேண்டும் என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் வி.என்.விஸ்வநாதன், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.குமார், ஒன்றியச் செயலர் ரா.பழனிச்சாமி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக