கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா 05/09/2013 அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் ரவி வரவேற்றார். விழாவில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் விலங்கியல் துறைத் தலைவர் ஜெயந்திதேவி, விலங்கியல் துறை சேர்ந்த பழனிவேல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரால் பாராட்டு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் தயாளமூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், வேதியியல் துறைத் தலைவர் ஷர்மிளா இந்திராணி விலங்கியத்துறை உதவி பேராசிரியர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் குறித்த பேச்சுப்போட்டி, பாடல்கள் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கணிதத்துறை பேராசிரியர் சிவசண்முகராஜா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக