ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர்கள் சமூக மாற்றத்திற்கான முன்னோடிகள்” என முதல்வா் வ.நா.விஸ்வநாதன் ஆசிாியா் தின விழா பேருரை

            பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பொன்விழா ஆண்டையொட்டி நடந்த ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் ஆங்கிலத் துறைத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான பேராசிரியர்.ரா.ரவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரையில் மலாலாவின் அடைமொழியான “ஒரு குழந்தை ஒரு ஆசிரியர் ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா ஆகியவைகள் இந்த உலகை மாற்றி அமைக்கும்” என்றும் “ஆசிரியர்கள் சமூக மாற்றத்திற்கான முன்னோடிகள்” என்றும் ஆசிரியர்களே நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் வல்லுநர்களை உருவாக்கக்கூடிய சிற்பிகள் என்றும் ஆசிரியர்கள் தான் பெற்ற அறிவினை மாணவர்களுக்கு அறிவுத்திறன் வளர்ப்பதற்கு பாடுபடவேண்டுமென்றும் சர்வபள்ளி டாக்டர்.இராதாகிருஷ்ணன்  அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டுமென்றும் ஒரு கல்விச்சாலையை ஆரம்பிக்கும் போது 100 சிறைச்சாலைகள் மூடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் பொன்விழாவான இக்கல்வியாண்டில் 50 பாடப்பரிவுகள் தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு கல்வியறிவு போதிக்க ஆசிரியர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம் என பேசினார்.
மேலும் பணிமூப்பு அடையவிருக்கும் பேராசிரியர்.ந.கண்ணன் பொருளியல் துறைத் தலைவர் அவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவின் தொடக்க நிகழ்;ச்சியாக கல்லூரியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர்.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கு.நிர்மல் குமார் பேராசிரியர்.கு.அருள்தாஸ் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக கவின் கலை மன்றத்தின் சார்பாக மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். 
      விழாவிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தனர். விழாவின் முடிவில் கணிதத்துறைத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளருமான பேராசிரியர்.சி.சிவசண்முகராஜா அவர்கள் நன்றி தெரிவித்தார்.
தினமணி-விழுப்புரம்-08.09.2014- திங்கள்

தினமலா் - 07.09.2014_புதுச்சோி-ஞாயிறு
Teachers Day_The Hindu_Sep_08_2014 -Puducherry Page No:3














Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

சனி, 7 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா 05/09/2013 அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் ரவி வரவேற்றார். விழாவில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் விலங்கியல் துறைத் தலைவர் ஜெயந்திதேவி, விலங்கியல் துறை சேர்ந்த பழனிவேல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரால் பாராட்டு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் தயாளமூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

 விழாவில், வேதியியல் துறைத் தலைவர் ஷர்மிளா இந்திராணி விலங்கியத்துறை உதவி பேராசிரியர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் குறித்த பேச்சுப்போட்டி, பாடல்கள் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கணிதத்துறை பேராசிரியர் சிவசண்முகராஜா நன்றி கூறினார்.



 Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 4 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Date : 05.09.2013.

Venue : New Building. 
Time  : 10.30 A.M. 
Organized by Parents Teachers Association.

Welcome Address                   :  Prof: R.Ravi,
                                                       HOD, Dept. of English

Presidential Address              :  Dr.V.N.Viswanathan,
                                                         Principal, 
                Periyar Arts College,
                                                        Cuddalore

Felicitation   to                        :   Prof. (Mrs) R.Jayanthidevi  ,
                                                         HOD, Dept. of  Zoology

Felicitation   by                        :   Dr. B. Sharmila Indirani,  
                                                         HOD, Dept. of  Chemistry.

Felicitation to                            :   Dr. V.Palanivelu,
                                                           Associate Professor,  Dept of Zoology

Felicitation by                          :    Dr. R.Kannan,
                                                          Assistant Professor,  Dept of  Zoology

Appreciation                             :    Prof. K.Dhayalamurthy,
                                                           Dept of English

Presentation of Gifts to            :   Teachers

Students Participation             :   a) Mimicry
                                                           b) Songs / Poems in praise of Teachers

Vote of Thanks                          :    Prof. C.Sivashanmugaraja,
                                                            HOD, Dept. of Mathematics


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP