பொருளியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறை ஆசிரியர்கள் 2005-2006

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறை ஆசிரியர்கள் 2005-2006


1. திரு. கோ. கந்தவேல், M.A., துறைத் தலைவர், தேர்வுநிலை விரிவுரையாளர்.
 
2. திரு. கா. இரா. லோகியா, M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.


3. திரு. ந. கண்ணன்., M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.


4.  திரு. இரா. பாஸ்கரன், M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.


5. திருமதி. சாந்தி இராமகிருஷ்ணன், M.A.,M.Phil.,M.Ed., முதுநிலை விரிவுரையாளர்.

6. திருமதி. வெ. அபிராமசுந்தரி., M.A.,M.Phil.,PGDE.,


7. காலியாக உள்ளது.

Read more...

திங்கள், 13 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொருளியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. திரு. ந. கண்ணன், M.A.,M.Phil., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.
 
2. திரு. இரா. பாஸ்கரன், M.A.,M.Phil., இணைப் பேராசிரியர்.

3. திருமதி. சாந்தி ராமகிருஷ்ணன்., M.A.,M.Phil.,M.Ed., உதவிப் பேராசிரியர்.

4. திருமதி. வெ. அபிராமசுந்தரி., M.A.,M.Phil.,PGDE.,உதவிப் பேராசிரியர்.

5. திருமதி. கோ. சத்தியபாமா., M.A.,M.Phil.,D.I.S.M.,உதவிப் பேராசிரியர். 

6. திருமதி. ர. சாருபாலா., M.A.,M.Phil.,M.Ed., உதவிப் பேராசிரியர்.

7. திரு. ரா. மகேசன்., M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர். 


Read more...

திங்கள், 11 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா


கடலூர்:
 
             கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. 
 
              விழாவுக்கு கல்லூரி முதல்வர் க.ரங்நாதன் தலைமை வகித்தார். மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஜெ.ஜோதிகுமார் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். 556 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 
 
வணிகவியல் துறையில் 109 மாணவர்களும், 
பொருளாதாரத் துறையில் 92 மாணவர்களும், 
வரலாற்றுத் துறையில் 50 மாணவர்களும், 
தமிழ் துறையில் 75 மாணவர்களும், 
ஆங்கிலத் துறையில் 15 மாணவர்களும், 
கணிதத் துறையில் 42 மாணவர்களும், 
இயற்பியல் துறையில் 26 மாணவர்களும், 
வேதியல் துறையில் 39 மாணவர்களும், 
விலங்கியல் துறையில் 30 மாணவர்களும், 
தாவரவியல் துறையில் 33 மாணவர்களும், 
கணினி அறிவியல் துறையில் 45 மாணவர்களும் 
 
பட்டம் பெற்றனர்.

Read more...

ஞாயிறு, 27 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் சாதனை

கடலூர்:

              பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
 
                     வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் வெங்கடேஸ்வரன் பொருளாதாரத்திலும், பெருமாள் தொழிற்வேதியலிலும் முதலிடம் பெற்றனர். மேலும் தொழிற்வேதியல் பாடத்தில் பாலமுருகன் 3ம் இடத்தையும், செல்வநாதன் 4ம் இடத்தையும், கார்த்திகேயன் 5ம் இடத்தையும் பெற்றனர்.

                    இயற்பியலில் மாணவி நாகலட்சுமி 8ம் இடத்தையும், முதுகலை கணிதத்தில் மாணவி முல்லை 5ம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.

பின்னர் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் கூறியது:

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் பெரியார் கலைக் கல்லூரி இணைவு பெற்று 8 ஆண்டுகளில் முதல் முறையாக பல்கலைக் கழக தேர்வில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

              சாதனை படைத்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களிலும் கல்லூரி மாணவர்களை முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எம்.எஸ்சி., வேதியில், இயற்பியல், விலங்கியல் மற்றும் எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தெரிவித்தார்.

Read more...

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2ம் நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர் : 

        கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதி திராவிடர் மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பொருளியல் மூன்றாமாண்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் 29 பேருக்கு வர வேண்டிய தலா 2,850 ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக 2,130 ரூபாய் மட்டுமே வந்தது.

              மாணவர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் கல்லூரியிலிருந்து அனுப்பிய பட்டியலில் குறிப்பிட்ட 29 மாணவர்களுக்கு எஸ்.சி., என குறிப்பிடுவதற்கு பதிலாக எஸ்.சி.சி., (எஸ்.சி.,கிறிஸ்தவர்) என தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டித்து ஆதி திராவிடர் மாணவர்கள் கடந்த 4ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளாக ஆதி திராவிட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP