வேலைவாய்ப்பு பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 20/09/2013 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மூன்றாம் ஆண்டு பயிலும் 200 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், அதற்கான தகுதியை பெறுவதற்கு மேற்கொண்டு படிக்க வேண்டிய தொழில் படிப்புகள் மற்றும் பயிற்சிகள், தகவல் தொடர்பு மற்றும் மொழிபுலமை ஆளுமைத் திறன் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்க காட்சிகளுடன் கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய தொழில் நிறுவன கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமில் டைட்டான் செயல் மேலாண்மை இயக்குநர் வைரவேல், பொது மேலாளர் ராஜி ஆறுமுகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியர்கள் சின்னதுரை, நிர்மல்குமார், டேவிட் சவுந்தர், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 5 மார்ச், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு


கடலூர் :

       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது.

        பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியுடன் சென்னை தாய் மரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களின் தனி திறனை மேம்பாடுத்துவதற்காக மாதிரி நேர்முக தேர்வு மூன்று நாள் நடைபெற்றது. பயிற்சி வகுப்யில் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவர்கள் 800 பேர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மாதிரி நேர்காணல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
 

      பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு கடலூர் டி.எஸ்.பி., வனிதா சான்றிதழ் வழங்கினார். வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியின் பொறுப்பாளரான பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயந்திதேவி, கண்ணன், மனோகரன், சிவக்குமார் செய்திருந்தனர். 


Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

கடலூர் : 

         கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது. கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு இயக்குனர் பிறையோன் சிறப்புரையாற்றினார். பார்மெக்ஸ் கேரியர் அகாடமி தலைவர் குருநாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் அளித்தார். பேராசிரியர்கள் கண்ணன், வண்ணமுத்து வாழ்த்திப் பேசினர். செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP