கடலூர் வெள்ளிக் கடற்கரை பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களால் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
சுற்றுலாத் துறை, பெரியார் கலைக் கல்லூரி சார்பில் உலக சுற்றுலா தினத்தை
முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூர் வெள்ளிக் கடற்கரை
சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தொடங்கிவைத்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் கடற்கரை
சுற்றுப் பகுதி முழுவதிலும் குப்பைகளை சேகரித்தனர். பின்னர், கல்லூரி மாணவ,
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
கு.தமிழ்செல்வராஜன்,சுற்றுலா அலுவலர் தமிழ்செல்வி, கல்லூரி முதல்வர்
என்.விஸ்வநாதன் மற்றும் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக