கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஜெனீவா உடன்பாடு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்துப் பேசியது:
ஜெனீவா உடன்பாட்டை 187 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. உலக அளவில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் நடந்து கொண்டிருக்கிறது. போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்வதே ஜெனிவா உடன்பாட்டின் நோக்கம் என்றார்.
பிரம்மா குமாரிகள் இளைஞர் சைக்கிள் ஊர்வலக் குழு மேலாளர் ரவி, நாமக்கல் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் பேசினர். விழாவில், சைக்கிள் ஊர்வலம் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக