புதிய பாடப் பிரிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய பாடப் பிரிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கடிதம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் புதிதாக 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி கல்லூரியின் முதல்வர், கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பி.காம்., எம்.காம்., எம்.எஸ்சி. உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4,095 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். நடப்புக் கல்வியாண்டில், எம்.எஸ்சி. வேதியியல், பி.ஏ. அரசியல் அறிவியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, வரும் கல்வியாண்டில், மேலும், புதிதாக சில பாடப் பிரிவுகளைத் தொடங்க, கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:

வரும் 2014-15ம் கல்வியாண்டில், பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., எம்.எஸ்சி., பிரிவில் புள்ளியியல், மைக்ரோ பயாலஜி, எம்.பில்., பிரிவில் வணிகவியல், பொருளியியல், வரலாறு, பி.எச்டி பிரிவில் வரலாறு, இயற்பியல், விலங்கியல் உள்பட 25 பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி வேண்டி, கல்லூரி கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் சில பாடப் பிரிவுகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் உள்ளது. புதிய பாடப் பிரிவு தொடங்க தகுதியான ஆசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் போன்ற விவரங்கள் குறித்த அறிக்கைகள் கல்லூரியில் இருந்து திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்படும். வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Read more...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்கு முன்மொழிவு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ, எம்ஏ, பிகாம், எம்காம், எம்எஸ்சி உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இங்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 நிகழ் கல்வியாண்டில், இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல், முதுநிலை பிரிவில் வேதியியல், தாவரவியல் எம்பில் பாடப் பிரிவு என முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்டி முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்டி முழு நேர வகுப்புகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதலாக புதிய வகுப்பறைகள், பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியது:

 நிகழ் கல்வியாண்டில் புதிதாக 8 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கு, தேவையான வகுப்பறைகள் மற்றும் பரிசோதனைக் கூடம் எத்தனை தேவை என்ற விவரங்கள் குறித்து தமிழக அரசு பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி, 10 வகுப்பறைகள், ஒரு பரிசோதனைக் கூடம் தேவை என வரைபடத்துடன் பட்டியல் அனுப்பியுள்ளோம் என்றார்.


Read more...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா

 கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் 16/09/2013 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்றது. 

விழாவில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் மேலும் பேசியது:

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் கூடுதல் பாடப் பிரிவுகளைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், கடலூர் பெரியார் கல்லூரியில்  கூடுதலாக 2 இளங்கலை பாடப் பிரிவுகளும், ஒரு முதுகலை பாடப் பிரிவு,  ஆராய்ச்சி மேற்படிப்பு என மொத்தம் 13 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் அளித்துள்ள இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக உருவாகவேண்டும் என்றார் அவர்.

கல்லூரி முதல்வர் வி.என்.விஸ்வநாதன், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், துணைத் தலைவர் சி.ஜெ.குமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.குமார், ஒன்றியச் செயலர் ரா.பழனிச்சாமி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 28 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

           கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சேர விருப்பம் உள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

           கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் ஆண்டில் புதிதாக பாடப்பிரிவுகள் துவங்க அரசு அனுமதியளித்துள் து. இதில் பி.எஸ்சி., புள்ளியியல், எம்.எஸ்சி., தாவரவியல், எம்.ஏ., ஆங்கிலம், வரலாறு, எம்.பிஎல்., தமிழ் (முழு நேரம்), பிஎச்.டி., தமிழ்., (முழு நேரம்) ஆகிய வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. 

            இந்த வகுப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 28ம் தேதி வரை உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP