இயற்பியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்பியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி (இயற்பியல்) மூன்றாம் ஆண்டு மாணவர் அரவிந்தவேல் அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் குத்துசண்டைக்கு இந்திய வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதே போல் முதுகலை (விலங்கியல்) இரண்டாம் ஆண்டு மாணவி பாக்கியலட்சுமி தன் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில் ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகை பெற்றுள்ளார். 

இந்த சாதனை மாணவர்களுக்கு, கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர் சம்பத் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 28 மே, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் கல்லூரிக் கால நினைவுகள் - புகைப்படங்கள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் கல்லூரிக் கால நினைவுகள் இயற்பியல் துறை 1992 - புகைப்படங்கள்












Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - புகைப்படங்கள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - இளமறிவியல், இயற்பியல் 1992- புகைப்படங்கள்


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 27/05/2012 (பாண்டிச்சேரி) 













Read more...

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, இயற்பியல் துறை - இலக்கிய மன்ற துவக்க விழா இயற்பியல் துறை - புகைப்படங்கள்

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, இயற்பியல் துறை -  இலக்கிய மன்ற துவக்க விழா  - புகைப்படங்கள்

Read more...

திங்கள், 13 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இயற்பியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இயற்பியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. முனைவர். ரெ. அமிர்தலிங்கம், M.sc.,M.Phil.,Ph.d., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.
 
2. திரு. க. மனோகரன், M.sc.,M.Phil.,B.Ed, இணைப் பேராசிரியர்.

3. திரு. சே. கோபாலன், M.sc.,M.Phil., இணைப் பேராசிரியர். 

4. திருமதி. அ. அன்பரசி, M.sc.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.

5.
முனைவர் ரா. திலக்குமார், M.sc.,M.Phil.,M.Ed.,Ph.D.,PGDCA., உதவிப் பேராசிரியர்.

6 . திரு. எ .சந்திரசேகரன், M.sc.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

7. முனைவர் ஆ. பிரதீப், M.sc.,M.Phil.,Ph.D., உதவிப் பேராசிரியர்.

8. முனைவர் க. அருள், M.sc.,M.Phil.,Ph.D., உதவிப் பேராசிரியர்.
 
9. முனைவர் ப. செல்வகுமாரி, M.sc.,Ph.D., உதவிப் பேராசிரியர்.

10. திரு. சா. யாக்கோபு, M.sc.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

Read more...

ஞாயிறு, 27 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் சாதனை

கடலூர்:

              பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
 
                     வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் வெங்கடேஸ்வரன் பொருளாதாரத்திலும், பெருமாள் தொழிற்வேதியலிலும் முதலிடம் பெற்றனர். மேலும் தொழிற்வேதியல் பாடத்தில் பாலமுருகன் 3ம் இடத்தையும், செல்வநாதன் 4ம் இடத்தையும், கார்த்திகேயன் 5ம் இடத்தையும் பெற்றனர்.

                    இயற்பியலில் மாணவி நாகலட்சுமி 8ம் இடத்தையும், முதுகலை கணிதத்தில் மாணவி முல்லை 5ம் இடத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.

பின்னர் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் கூறியது:

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் பெரியார் கலைக் கல்லூரி இணைவு பெற்று 8 ஆண்டுகளில் முதல் முறையாக பல்கலைக் கழக தேர்வில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

              சாதனை படைத்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களிலும் கல்லூரி மாணவர்களை முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எம்.எஸ்சி., வேதியில், இயற்பியல், விலங்கியல் மற்றும் எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தெரிவித்தார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP