கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 16/09/2013 (திங்கள்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
இது குறித்து கல்லூரியின் முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளும், முதுநிலை பிரிவில் வேதியியல் பாடப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 16/09/2013 (திங்கள்கிழமை) தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இளநிலை பிரிவிற்கான விண்ணப்பம் ரூ.27, முதுநிலை பாட பிரிவு விண்ணப்பம் ரூ.42, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27-ம் தேதி மாலைக்குள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும். இளநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 3-ம் தேதியும், முதுநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 4-ம் தேதியும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தி அன்றே சேர்க்கை நடைபெறும்.
மேலும், கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாவரவியல் எம்.பில்., பாடப் பிரிவு முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்.டி., முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்.டி., முழுநேர வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக