Dr. V. N. Viswanathan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr. V. N. Viswanathan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 பிப்ரவரி, 2016

கடலூா் பொியாா் கலைக்கல்லூாியில், ICMR நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேசிய கருத்தரங்கு “பொதுநலம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் (04.02.2016 மற்றும் 05.05.2016) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.


ICMR நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேசிய கருத்தரங்கு “பொதுநலம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் தனது தலைமையுரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் திட்டங்கள் முழுமை பெறஉதவும் என்றும்ää கடந்த சில ஆண்டுகளாக கடலூர் பெரியார் கலைக்கல்லூரியின் பல்வேறு துறைகளில் காணலாகும் தேசிய கொள்கைகளைப் புலப்படுத்தும்; நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. விலங்கியல் துறை ஏழை எளிய மக்களுக்காக பொது நலன் மற்றும் சுகாதாரம் தொடர்பாக புதுமையான சிந்தனைகளை இக்கருத்தரங்குகளில் முன்வைக்கும்.
உலக சுகாதார கொள்கைகளை நிறைவேற்றும் இந்தியாவிற்கு பல்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றன. வல்லுநர்கள்ää கொள்கை உருவாக்குபவர்களிடம் அறிவு பற்றாக்குறை இருப்பதாக கருதுகின்றேன். அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டிப்பாக கொள்கை உருவாக்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
தேசிய சுகாதாரம் புதிய சவால்களை சமாளிக்கும் நிலையில் இருக்கிறது. அரசு GDP-ல் 1.04 சதவீதம் சுகாதாரத்திற்கு செலவிடுகின்றது.
              1. இந்தியாவில் உலக சுகாதார நிலைமைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்.
              2. சுகாதார கொள்கைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
              3. தரமான சுகாதார சேவை இடம்பெறுதல் அவசியம்
     4. உலக நோய்களான எபோலா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பாக குறைவான விழிப்புணர்வே உள்ளது.
        5. மற்ற பிற நாடுகளிலிருந்து இது பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு பாடுபடுகின்றது.
ஜிகா வைரஸின் அபாயங்கள்
1. குழந்தைகளை தாக்கும்
2. பிளசண்டாவில்; வைரஸ் இடம்பெறும்
3. ஏடிஸ் கொசுக்கள் மூலம் தொற்று ஆகும்.
பொது சுகாதாரம் கொள்கையாளர்களுக்கும் மற்றும் உருவாக்குபவர்களுக்கும் பிரச்சனையாகத் திகழ்கின்றது. சுகாதாரம் அடிப்படை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையாகும். சராசரியாக இந்திய நாடு GDP-யில் 5 சதவீதம் பொது சுகாதாரத்திற்கு செலவு செய்கின்றது.
வரிசீர்திருத்தக்குழு புகையிலை மற்றும் மதுவிற்கு அதிக வரி விதித்து அதனை சுகாதாரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.
இந்திய தேசிய சுகாதார திட்டத்தின் அனைவருக்குமான பயன்கள் கிட்ட திட்டமிடப்படுகின்றது. ஆப்பிரிக்க திட்டத்தின் மூலம் இந்திய அரசு வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இது கோடிக்கனக்கான கிராமங்களுக்கு பயன்படும்.
பொது சுகாதாரத்திட்டம் பின்வரும் கொள்கைகளை உடையது.
1. சமமானது
2. பரந்துபட்டது
3. பன்மயத்தன்மை வாய்ந்தது
4. நம்பிக்கையூட்டக்கூடியது
5. பரவலாக்கப்பட்டது.
ஒவ்வொரு சுகாதாரத்திட்டமும் அந்;தந்த மாநிலம் மற்றும் தேசிய அளவில் தேவைக்கேற்றவாறு செயல்படுத்தப்படும். நமது சுகாதாரம் என்பது ஒவ்வொரு பிறக்கும் குழந்தையை இறப்பதிலிரந்து காப்பாற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பொது மற்றும் தனியாரின் பங்களிப்புடன் பொதுநலம் மற்றும் சுகாதார திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனை தேசிய தர நிர்ணய கழகம் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவ நடைமுறைச் சட்டம்-2010 இதனைச் செயல்படுத்த வேண்டும். சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமானது கிராமப்புற மக்கள் தொகைக்கேற்ப ஏற்படுத்த வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் பொது சுகாதார திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
இக்கருத்தரங்க மாநாட்டினை விலங்கியல் துறைத்தலைவர் முனைவர்.ரா.கண்ணன் அவர்களும், கருத்தரங்க செயலர் முனைவர்.கு.அருள்தாஸ் அவர்கள் செய்தனர்.










Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 5 மே, 2015

கடலூா், பொியாா் அரசு கலைக் கல்லூாியில் 2015-16-ம் கல்வியாண்டில் சேரும் மாணவா்களுக்கு 15 நாட்கள் சிறப்பு பயிற்சி இந்த கல்வியாண்டு முதல் அறிமுகம்

தினமலா் 05.05.2015 செவ்வாய்க்கிழமை

தினத்தந்தி 05.05.2015 செவ்வாய்
தினமணி 05.05.2015


Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 23 ஜனவரி, 2015

UGC Sponsered Inter-collegiate Youth Parliament in February 2015, Organized by Department of Political Science

UGC-Sponsored
Inter-Collegiate Youth Parliament-2014
*******
The Department of Political Science, Periyar Government Arts College, Cuddalore will organize and conduct UGC -sponsored inter-collegiate Youth Parliament by the second week of February-2015. The training on Parliamentary procedures and practices shall be imparted for 90 students from various colleges of South Indian States. After training for 7 days on various practices of Parliament, different roles will be assigned to the students according to their abilities.
The very purpose of conducting Youth Parliament is to educate the student community on democratic functioning and to understand the working of Indian Parliament system.  The training will be imparted by experts who attended the training conducted by Ministry of Parliamentary affairs, Government of India. The best performing students will be awarded three prizes and citation. Such innovative teaching methods shall involve student community themselves in the learning process. It is kind of citizenship training, political education and to learn the Parliamentary process in India.

All the activities are co-ordinated by Dr.V.N.Viswanathan, Principal, Periyar Govt. Arts College, Cuddalore. Those who want to participate in the “Inter-Collegiate Youth Parliament-2015” can register their names by calling +91 94442 21560 (or)
 email:elavarasanphd83@gmail.com, politicalsciencepac@gmail.com 

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 14 ஜனவரி, 2015

கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தேசிய தரநிர்ணயக் குழுவினர் 08-10, ஜனவரி-2015 ஆய்வு செய்தனர்



தினமணி 09.01.2015

தினமலா் 09.01.2015




கடலூர் மாவட்ட செய்திகள்

Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

சனி, 3 ஜனவரி, 2015

கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழு வருகை ஜனவரி 8-10 (2015) -NAAC Peer Team Visit


கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழுவினால் நியமிக்கப்பட்ட 3 பேராசிரியர்கள் கொண்ட தேசிய தரச்சான்று நிர்ணயக்குழு (NAAC Peer Team Visit) வருகின்ற 2015 ஜனவரி 8-ம் தேதி வியாழக்கிழமை அன்று கல்லூரிக்கு வருகைதந்து 08-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை மூன்று நாட்கள் கல்லூரியின் தரத்தினை ஆய்வுசெய்து தேசிய தரச்சான்றினை வழங்கவுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரியானது பல்கலைக்கழகமாக மாறுவதற்கான அனைத்து அடிப்படை தகுதிகளையும் பெற்றுள்ளது. பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகின்ற இவ்வேளையில் தமிழக அரசு இக்கல்லூரியை முதல்தரநிலை (Grade -I) கல்லூரியாக கடந்த மே 2014-ல் தரம் உயர்த்தி அறிவித்துள்ளது. 
      எனவே உயர்நிலை தேசிய தரச்சான்று பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள்,  அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். 

தினத்தந்தி 05.01.2014 

jpdkyh; 06.01.2014
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 31 டிசம்பர், 2014

The Periyar Government Arts College here is all set to start several M.Phil and Ph.D. programmes from the coming academic year (2014 - 2015).




The Hindu 02.02.2015 (Friday)
College to offer M.Phil, Ph.D

The Periyar Government Arts College here is all set to start several M.Phil and Ph.D. programmes from the coming academic year (2014 - 2015).
In a statement released here, principal V.N. Viswanathan stated that based on its strength of infrastructure, staff and resourcefulness the college was upgraded to Grade I in May 2014.
The institution is now preparing for the second cycle of accreditation by the National Assessment and Accreditation Council. The accreditation process would go on from January 8 to 10.
The college is running 14 undergraduate and 11 post-graduate courses. The Higher Education Department has given concurrence to start new UG and PG courses besides offering M.Phil and Ph.D on full-time and part-time basis.
The courses and programmes to be started are as follows: B.Sc in visual communication and PG courses such as M.A (public administration) and MSW (Master of Social Works).
Research programmes: M.Phil (both full time and part time) in commerce, economics, computer
 science, zoology, physics and micro-biology.
Ph.D programmes (both full time and part time) in microbiology physics, zoology and history. The applications for the above courses and the programmes could be obtained from the college.




Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 21 நவம்பர், 2014

பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் சார்பாக மனித உரிமைகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் “உலகளாவிய மனித உரிமைகள்- இந்தியாவில் சட்டம் சமூகம் பொருளாதாரம் மற்றும் அரசியல் முறையிலான தாக்கங்கள்”

Read more...

சனி, 8 நவம்பர், 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவா் சோ்க்கைக்காண வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முனைவர்பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தமிழ்த்துறை மற்றும் தாவரவியல் துறையில் முழுநேரம் மற்றும் பகுதிநேரங்களிலும் வணிகவியல் துறையில் பகுதிநேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவர் சேர்க்கையானது திருவள்ளுவர் பல்கலைக் கழக முனைவர் பட்டமாணவர் சேர்க்கைவிதி முறைகளின்படி நடைபெறும். விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேரக் கடைசிநாள் 10.12.2014. மேலும் விபரங்களுக்குக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட துறைத் தலைவர்களையோ நேரில் அணுகித் தெரிந்துகொள்ளலாம்.


தினமணி-10.11.2014
 பெரியார் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு
கடலூர் அரசு பெரியார் கலை, அறிவியல் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி பகுதிக்கான, முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி.) படிப்புக்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தாவரவியல் துறையில் முழு நேரம் மற்றும் பகுதி நேரங்களிலும், வணிகவியல் துறையில் பகுதி நேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேர வரும் டிசம்பர் 10ஆம் தேதி கடைசி நாள்.
மேலும், விவரங்களுக்கு கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவர்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.



தினமலா்  10.11.2014 திங்கள் கிழமை
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் அரசு கல்லூரிக்கு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு பெற்றது.

தினகரன் 08.11.2014 சனிக்கிழமை
கடலூரில் நடந்த அரசு விழாவில் நுகர்வோர் அமைப்புகள் வெளிநடப்பு

கடலூர், : கடலூரில் நடந்த அரசு விழாவில், பெயரளவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி நுகர்வோர் அமைப்புகள் விழாவை புறக்கணித்தன.

ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்படி மார்ச் 15ம் நாள் உலக நுகர்வோர் உரிமை தினம் நடத்தப்பட வேண்டும். பல்வேறு காரணங்களால் இவ்விழா நடத்தப்படாமல் நேற்று கடலூர் டவுன்ஹாலில் விழா நடத்தப்பட்டது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்தின.

காலை 10 மணிக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த விழா 11.20 மணிக்கு துவங்கியது. தாமதமாக விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், வரவேற்புரை நிகழ்ச்சி முடிந்ததும் சிறந்த பள்ளி கல்லூரி நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசு தொகை வழங்கிவிட்டு விழா மேடையை விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.

விழா அரங்கிலிருந்து திடீரென ஆட்சியர் சென்றதற்கு பெரும்பாலான நுகர்வோர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து விழாவை புறக்கணித்து அவர்களும் வெளியேறினர்.

உலக நுகர்வோர் உரிமை தின விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வாழ்த்து செய்தி சொல்வது மரபாகும். அதனை அவர் செய்யாமல் எந்த காரணத்தையும் கூறாமல், வந்த வேகத்திலேயே புறப்பட்டுச் சென்ற ஆட்சியரின் நடவடிக்கை நுகர்வோர்களின் மனதை வேதனையடைய செய்து விட்டதாக கூறி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தங்கவேலு வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், கடலூர் கோட்டாட்சியர் டாக்டர் ஷர்மிளா, பொதுவிநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மணி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராஜா உள்பட பலர் வாழ்த்துரையும் கருத்துரையும் வழங்கினர். பள்ளி கல்லூரி நுகர்வோர் மன்றத்தின், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம பகுதியினர் ஆகியோருக்கு இவ்விழாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசுத்தொகைகளும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.

பரிசு பெற்ற பள்ளி கல்லூரிகள்:கடலூர்
மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு கடலூர் பெரியார் அரசு கல்லூரிக்கும், இரண்டாம் பரிசு கடலூர் தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், மூன்றாம் பரிசு நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
பள்ளிகள் அளவில் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும், நடுவீரப்பட்டு அரசினர் மேல்நிலைப்ள்ளிக்கு இரண்டாம் பரிசும், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பள்ளி கல்லூரி நுகர்வோர் மன்றங்களுக்கும் முதல் பரிசாக தலா ரூ.1500ம், இரண்டாம் பரிசாக ரூ. ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.500ம் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடத்த
போவதாக அறிவிப்பு
கடலூரில் நேற்று நுகர்வோர் குழு கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் திட்டக்குடி முத்துசாமி, விருத்தாசலம் செந்தமிழ்செல்வம், சிப்காட் அருள்செல்வம், பண்ருட்டி ராஜவேலு, நெல்லிக்குப்பம் பாலசுப்ரமணியம், அரசன்குடி ராமமூர்த்தி, வடலூர் கல்விராயர், வேம்பு, கீரப்பாளையம் மோகனா உள்ளிட்ட நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும் ஆட்சியர் கலந்து கொள்வதில்லை. தொடர்ந்து நுகர்வோர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து வருகிறார். நேற்றைய அரசு நுகர்வோர் விழாவிலும் மரபை மீறி இந்த அரசிற்கு அவப்பெயர் வருமாறு ஆட்சியரின் நடவடிக்கை அமைந்திருந்தது. எனவே, ஆட்சியரின் நுகர்வோர் விரோத போக்கை கண்டித்து வரும் 12ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை



தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

உலக சுற்றுலா தினத்தையொட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை செய்தனா்.




1. தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை

கடலூர் வெள்ளிக்கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை உதவி கலெக்டர் ஷர்மிளா நேற்று தொடங்கி வைத்தார்.
குப்பை தொட்டி
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் கடற்கரை உள்ளது. இந்த சுற்றுலா தலத்துக்கு பொழுதுபோக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள் இங்குள்ள கடைகளில் உணவு பண்டங்களை வாங்கிச்சாப்பிட்டு விட்டு, பேப்பர் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை கடற்கரை மணல்பரப்பிலேயே வீசியெறிகிறார்கள்.
ஏனெனில் இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும் ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல்பரப்பெங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது.
தூய்மை படுத்தும் பணி
இந்த நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை நேற்று மேற்கொண்டனர்.
இந்த பணியை உதவி கலெக்டர் ஷர்மிளா தொடங்கி வைத்தார். இதில் அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவமாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு வெள்ளிக்கடற்கரை மணல் பரப்பில் கிடந்த குப்பைகளை சாக்குப்பைகளில் பொறுக்கி அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார் கலைக்கல்லூரி முதல்வர் விசுவநாதன், நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை


2.தினமணி 31.10.2014 வெள்ளிக்கிழமை

  சில்வர் பீச்சில் தூய்மைப் பணி:  கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் சில்வர் பீச்சை தூய்மைப் படுத்தும் பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச்சுக்கு பொழுது போக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள் இங்குள்ள கடைகளில் உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பேப்பர் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை கடற்கரை மணல் பரப்பிலேயே வீசியெறிகின்றனர். 

    இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல் பரப்பெங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது.

                 இந்நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையும், பெரியார் அரசு கலைக் கல்லூரியும் இணைந்து சில்வர் பீச்சை தூய்மைப் படுத்தும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனர். இந்த பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா தொடங்கி வைத்தார். இதில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு சில்வர் பீச் மணல் பரப்பில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர். 


        சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், வட்டாட்சியர் செழியன், நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 7 நவம்பர், 2014

Periyar Government Arts College by awarding First Prize in conducting various consumers related awareness programmes "WORLD CONSUMER RIGHTS DAY – 2014"

WORLD CONSUMER RIGHTS DAY – 2014
 "CITIZEN CUNSUMER CLUB"

       On the event of World Consumer Rights Day 2014, the Cuddalore district administration has crowned Periyar Government Arts College by awarding First Prize in conducting various consumers related awareness programmes. The Citizen Consumer Club lead by Dr.R.Thilak Kumar from 2009 to 2014 received the cash prize of Rs.1500/ - from the District Collector Mr.Suresh kumar. In the College premises, Dr.R.Thilak kumar was appreciated by the Principal for his relentless services towards consumer education. 



Halloween Comments - http://www.halloweentext.com

கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடலூா் அரசு கல்லூாி முன்பு கவுரவ விாிவுரையாளா்கள் 6 மாத ஊதியம் வழங்க கோாி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை



தினத்தந்தி 28.10.2014- செவ்வாய்க்கிழமை



 தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை


தினமலா் 28.10.2014- செவ்வாய்க்கிழமை
     
தினமணி 28.10.2014 செவ்வாய்க்கிழமை 

பொியாா் கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம்  நடத்தினா்.
    ஊதியம் வழங்காததை கண்டித்து கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான வகுப்பு நடத்துவதற்காக அரசு சார்பில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் வகுப்புகள் தடையின்றி செயல்பட கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் அரசுக் கல்லூரியில் இதுபோன்று நியமிக்கப்பட்டுள்ள 34 விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம்.
இதையடுத்து திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்தனர். திங்கள்கிழமை காலை மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்த நிலையில் விரிவுரையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

திங்கள், 27 அக்டோபர், 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.


விருத்தாசலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரி அணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

கால்பந்து போட்டி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே கால்பந்து, கபடி போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் இரு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 40 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் வரை பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் திருப்பத்தூரில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது. இந்த போட்டியில் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அணிகளும் பங்கேற்கும். இதில் தேர்வாகும் அணி நவம்பர் இறுதியில் கேரளாவில் அனைத்திந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நிகழ்ச்சி

நேற்று விருத்தாசலத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கல்விக்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவாஸ்கர் வரவேற்றார். போட்டியை கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இன்றும், போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி பேராசிரியர்கள் மகேஷ், ரவி, ராஜமாணிக்கம், பாலு, தியாகலிசன், சாந்தகுமாரி, ஜானகி, பயிற்சியாளர் அறிவழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.         


     திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூியில் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 14 கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன. 

     இப்போட்டியில்,  கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியின் சார்பில் கிரிராஜ், விக்னேஷ், சந்துரு, கதிரேசன், அஜித்குமார் சங்கரையா, கிரி, செழியன், கிருஷ்ணராஜ், நந்தகுமார்,  மைக்கேல், ஜவஹர் மற்றும் நித்யானந்தம் ஆகிய 13 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று சான்றிழழ்களை பெற்று வந்தனர். இவ்விளையாட்டு வீரர்களில் கிரிராஜ் விக்னேஷ் மற்றும் கதிரேசன் ஆகிய 3 மாணவர்கள் பல்கலைகழக விளையாட்டு போட்டிக்;கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
            விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் பரிசுகள் வழங்கியும், கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கு.நிர்மல்குமார் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.



தினத்தந்தி ஞாயிறு, 26.10.2014







Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP