கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 20/09/2013 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மூன்றாம் ஆண்டு பயிலும் 200 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், அதற்கான தகுதியை பெறுவதற்கு மேற்கொண்டு படிக்க வேண்டிய தொழில் படிப்புகள் மற்றும் பயிற்சிகள், தகவல் தொடர்பு மற்றும் மொழிபுலமை ஆளுமைத் திறன் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்க காட்சிகளுடன் கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் அமைப்பு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய தொழில் நிறுவன கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமில் டைட்டான் செயல் மேலாண்மை இயக்குநர் வைரவேல், பொது மேலாளர் ராஜி ஆறுமுகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பேராசிரியர்கள் சின்னதுரை, நிர்மல்குமார், டேவிட் சவுந்தர், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக