பேராசிரியர் ஜெயந்திதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் ஜெயந்திதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா 05/09/2013 அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கண்ணன் தலைமை தாங்கினார். ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் ரவி வரவேற்றார். விழாவில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் விலங்கியல் துறைத் தலைவர் ஜெயந்திதேவி, விலங்கியல் துறை சேர்ந்த பழனிவேல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரால் பாராட்டு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் தயாளமூர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

 விழாவில், வேதியியல் துறைத் தலைவர் ஷர்மிளா இந்திராணி விலங்கியத்துறை உதவி பேராசிரியர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் குறித்த பேச்சுப்போட்டி, பாடல்கள் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கணிதத்துறை பேராசிரியர் சிவசண்முகராஜா நன்றி கூறினார்.



 Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர்:


       கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

       கல்லூரிகளில் சீனியர்  மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து துன்புறுத்துவதை தடுக்கும் பொருட்டும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போலீஸ் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் 25/08/2012 அன்று    நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி பேராசிரியர் (பொறுப்பு) ஜெயந்திதேவி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., சுந்தரவடிவேல், புதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் ராக்கிங் மற்றும் ஈவ்டீசிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், இத்தவறை செய்வோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மேலும், மாணவர்கள் அனைவரும் நட்புடன் பழக வலியுறுத்தினர்.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP