புதிய வகுப்பறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய வகுப்பறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் விஸ்வநாதன் கூறியது: 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவு நடப்புக் கல்வியாண்டில் புதிதாக துவங்கப்பட்டது. தற்போது முதலாமாண்டு வகுப்புகள் நடக்கிறது. இப்பாடப் பிரிவுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாமாண்டு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புதிதாக வகுப்பறை கட்டுவதற்கு கடலூர் தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 21ம் தேதி, அழகிரி எம்.பி., அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை (கட்டடப் பிரிவு) சார்பில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரைத் தளம் மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில், பேராசிரியர்கள் அறை, இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் மூன்று அறைகள் அமைக்கப்படுகிறது
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 22 நவம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை  (21.11.2013) அன்று  நடந்தது. 

கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். பேராசிரியர் கண்ணன் வாழ்த்திப் பேசினார். விழாவில், எம்.பி.,யின் செய்தி தொடர்பாளர் குமார், விவசாய பிரிவு வேலுச்சாமி, எம்.பி.,யின் தலைமை நிலையச் செயலர் ரங்கமணி, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி  அழகிரி எம்.பி. பேசியது: 

பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகள் விண்கலம் அனுப்ப முடியாத நிலையில், இந்தியா அனுப்பியுள்ளது. இது மகத்தான சாதனை என்றாலும், இந்தியா மேலும், வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி என்பது கல்வி சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து துவங்க முடியும். அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால், ஈரானில் கச்சா எண்ணெயை வாங்கும் திறன் எந்த நாட்டிற்கும் கிடையாது. அமெரிக்காவிற்கு ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் விஞ்ஞானிகள் எண்ணிக்கை குறைவு. ஆனால், அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மனிதனின் சக்திக்கு ஆற்றல் குறைவு. தவறான சிந்தனைகளால் கவனம் சிதறக் கூடாது. தோல்வி எங்கிருந்து துவங்குகிறது என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும். சிறிய சிறிய விஷயங்களைப் பார்த்து கவனத்தைச் சிதற விடுகின்றனர். விவேகானந்தர் கூறியது போல், மாணவ, மாணவிகள் எதையும் படித்து சாதிக்க முடியும். வலிமை, அன்பு உள்ளவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற வேண்டும். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்கு முன்மொழிவு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அரசுக்குப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

 கடலூர் தேவனாம்பட்டினத்தில் 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ, எம்ஏ, பிகாம், எம்காம், எம்எஸ்சி உள்பட பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இங்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3,600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 நிகழ் கல்வியாண்டில், இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல், முதுநிலை பிரிவில் வேதியியல், தாவரவியல் எம்பில் பாடப் பிரிவு என முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்டி முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்டி முழு நேர வகுப்புகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளின் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கூடுதலாக புதிய வகுப்பறைகள், பரிசோதனைக் கூடம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறியது:

 நிகழ் கல்வியாண்டில் புதிதாக 8 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கு, தேவையான வகுப்பறைகள் மற்றும் பரிசோதனைக் கூடம் எத்தனை தேவை என்ற விவரங்கள் குறித்து தமிழக அரசு பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி, 10 வகுப்பறைகள், ஒரு பரிசோதனைக் கூடம் தேவை என வரைபடத்துடன் பட்டியல் அனுப்பியுள்ளோம் என்றார்.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP