கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கடலூர் :
கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் 12/09/2013 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் விஸ்வநாதன் தலைமை தாங்கி தற்கொலை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
பேராசிரியர்கள் டேவிட் சவுந்தர், பன்னீர்செல்வம், நிர்மல்குமார் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக பேராசிரியர் முருகதாஸ் வரவேற்றார். முடிவில் பேராசிரியை ஞானாம்பிகை நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக