கணிதத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணிதத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மார்ச், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் 18.03.2014 அன்று நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் 18.03.2014 அன்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  கௌசியங் தேசிய பல்கலைக்கழகம், தைவான் பேராசிரியர்கள் ஐந்து நபர்கள் ஹாங், லின், வாங், சென் மற்றும் லின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கௌசியங் தேசிய பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளர் பேரா.ஹாங் அப்பல்கலையின் ஐந்து பாட பிரிவுகளைப் பற்றி விளக்கினார். பேரா. வாங் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தையும், தைவானில் அமைந்துள்ள உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடத்தினைப் பற்றியும், புத்தமத கோயில்கள் மற்றும் நீளமான துறைமுகத்தை பற்றியும் விவரித்தார். பேரா.லின் கணினி அறிவியல் துறையில் “Recent Trends in Data Analysis” பற்றியும், பேரா.சென் கணிதத் துறை “Fuzzy Analysis” பற்றியும் விளக்கினார். 

இவ்விழாவிற்கு கணிதத் துறை பேராசிரியர் முனைவர் சு.ராமதிலகம் அவர்கள் ஏற்பாடு செய்து  வரவேற்புரை,  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மற்றும் நன்றி கூறினார். இவ்விழாவில் கணிதத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 





















Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர்களின் வருகைப்பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிக்க ஏற்பாடு

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் தினம் 07.02.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது. 

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு பேசியது:

மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் இதர விபரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிப்பது எனவும் தற்போது மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (SYSTEM) முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது எனவும் கூறினார். 

இவ்விழாவில் கலந்துகொண்ட பெருந்திரளான பெற்றோர்களை கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவசண்முகராஜா அவர்கள் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் இரா.ரவி நன்றி கூறினார்.









Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கட்டுரை தொகுப்புகள் (கோடிக்கு மேல் சில எண்கள்)

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கட்டுரை தொகுப்புகள் (கோடிக்கு மேல்)

தொகுத்தவர் : கி.திருபுவனேஸ்வரி, முதுகலை முதலாமாண்டு (கணிதம்) 


ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்துலட்சம், கோடி, பத்துகோடி இவற்றை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். கோடிக்கு மேல் சில எண்கள் உள்ளன 

அவை பின் வருமாறு ,

கோடி : 1,00,00,000
அற்புதம் : 10,00,00,000
நிகற்பதம்:  1,00,00,00,000
கும்பம் :  10,00,00,00,000
கணம் : 1,00,00,00,00,000
கற்பகம் : 10,00,00,00,00,000
நிகற்பதம் : 1,00,00,00,00,00,000
பதுமம்: 10,00,00,00,00,00,000 
சங்கம் : 1,00,00,00,00,00,00,000 
வெள்ளம் : 10,00,00,00,00,00,00,000 
அந்நியம்  : 1,00,00,00,00,00,00,00,000 
மத்தியம் : 10,00,00,00,00,00,00,00,000 

Read more...

திங்கள், 13 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. முனைவர். ச . ஞானசேகரன், M.sc.,M.Phil.,Ph.d., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.
 
2. திருமதி. கு. சுடர்விழி, M.sc.,M.Phil., உதவிப் பேராசிரியர்.


3. திரு.சி. சிவசண்முகராஜா, M.sc.,M.Phil., உதவிப் பேராசிரியர்.


4. திருமதி. ரா. ஆனந்தி, M.sc.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.


5. திரு. லூ. ஹென்றி, M.sc.,M.Phil.,உதவிப் பேராசிரியர். 


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP