மாணவர் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 மே, 2015

பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வியண்டிற்கான இளநிலை பாடப்பிரிவிற்கான கலந்தாய்வு 22.03.2015 அன்று துவங்கியது.

Read more...

திங்கள், 19 மே, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான தகவல் தொகுப்பு (Prospects)

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான தகவல் தொகுப்பு (Prospects)









Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 18 மே, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் 19.05.2014 (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

 கடலூர் பெரியார் கல்லூரியில் 2014-2015ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இளங்கலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கல்லூரியில் 19.05.2014 (திங்கள்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 06.06.2014 அன்று மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும். முதுகலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் நடைபெறும். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 9 மே, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் 19.05.2014 அன்று தொடக்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான  விண்ணப்ப விநியோகம் 19.05.2014 அன்று தொடங்குகிறது.





Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 16 செப்டம்பர், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்

கடலூர்: 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்  16/09/2013 (திங்கள்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக  இளங்கலை அரசியல் அறிவியல், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளும், முதுநிலை பிரிவில் வேதியியல் பாடப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 16/09/2013 (திங்கள்கிழமை) தேதி காலை 10 மணி முதல் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இளநிலை பிரிவிற்கான விண்ணப்பம் ரூ.27, முதுநிலை பாட பிரிவு விண்ணப்பம் ரூ.42, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27-ம் தேதி மாலைக்குள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும். இளநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 3-ம் தேதியும், முதுநிலை பாடப் பிரிவிற்கு அக்டோபர் 4-ம் தேதியும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தி அன்றே சேர்க்கை நடைபெறும்.

மேலும், கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாவரவியல் எம்.பில்., பாடப் பிரிவு முழு நேர வகுப்புகளும், தாவரவியல் பிஎச்.டி., முழு நேரம் மற்றும் பகுதி நேர வகுப்புகளும், வணிகவியல் பிஎச்.டி., முழுநேர வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான் முதுகலைப் பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பு  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்குவது 13-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக எம்.எஸ்சி. கணிதப் பாடத்தில் சேர 96 விண்ணப்பங்களும், எம்.காம். பாடத்துக்கு 92 மற்றும் இதர பாடப்பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 1,100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பில் சேர வரவழைக்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களும் விற்பனையாகி விட்டது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது அதிகம். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான மாணவ, மாணவிகளை கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடக்கிறது என்றார். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

 கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் முதுகலைப்  பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்.  உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  விண்ணப்பத்தின் விலை ரூ.42.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்  பிரிவினைச் சார்ந்த  மாணவர்கள் சாதிச் சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வியாழன், 27 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் சேர கடும் போட்டி

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நடந்த கலந்தாய்வில் கணினி அறிவியல் பாடத்தில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் கடந்த 25-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. கணிதம், கணினிஅறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்வற்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து இடங்களும் பூர்த்தியானது. புள்ளியியல் பாடத்துக்கு மாணவர்கள் குறைவாக வந்திருந்தனர். இதில் 4 மாணவர்கள மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 26 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடக்கம்


கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கவுன்சிலிங் தொடங்கிய 1 மணி நேரத்தில் கணினி அறிவியல் பாடத்துக்கான சேர்க்கை முடிவடைந்தது.

கலந்தாய்வு:

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2013–14–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (24/06/2013) தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வில் முதல் நாளான நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவனத்தினரின் பிள்ளைகள், என்.சி.சி.யில் ‘ஏ‘ சான்றிழ் பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 2–வது நாளான நேற்று (25/06/2013) காலையில் இதர பிரிவு மாணவர்களுக்கு கணக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இந்த கலந்தாய்வை நடத்தினர்.

பின்னர் இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் அளித்த பேட்டி: 

சிறப்பு பிரிவினர்

கலந்தாய்வை பொறுத்தவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூட இன்னும் காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால் கலைக்கல்லூரிகளை பொறுத்தவரை அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 6 பேரும், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 18 பேரும், என்.சி.சி. பிரிவில் ஒருவரும் என மொத்தம் 25 பேர் கலந்துகொண்டனர். முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கான பிரிவில் ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து நேற்று (25/06/2013) புள்ளியியல், கணக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்தாய்வு நடைபெற்ற 1 மணி நேரத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்தது. கணக்கு பாடத்துக்கும் ஓரளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

புள்ளியில் பாடம்:

புள்ளியல் பாடத்துக்கான கலந்தாய்வில் பகல் 1 மணிவரையில் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இதற்கு பள்ளிக்கூடங்களில் புள்ளியில் பாடம் தனி பாடமாக இல்லாததே காரணம். 12–ம் வகுப்பில் கணக்கு பாடத்துடன் சேர்ந்து புள்ளியியல் பாடம் வருகிறது. இதனால் பள்ளியில் கணக்கு பாடம் எடுத்து படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது பெரும்பாலானோர் கணக்கு பாடத்தையே தேர்வு செய்கிறார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் பாடம் உள்ள ஒரே கல்லூரி பெரியார் அரசு கல்லூரி தான்.
பெரியார் கல்லூரியில் அனைத்து பாட பிரிவுகளுக்கும் மொத்தம் 900 இடங்கள் உள்ளன. இதில் வணிகவியல் பாடத்துக்கு நிறையபேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக ஆங்கிலபாடத்துக்கும், 3–வதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இயற்பியல்–வேதியியல்:

தொடர்ந்து 3–வது நாளான இன்று(புதன்கிழமை) இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கும், நாளை(வியாழக்கிழமை) தாவரவியல், விலங்கியல், தொழில்முறை வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய பாடங்களுக்கும், வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) வணிகவியல், பி.பி.ஏ. ஆகிய பாடங்களுக்கும், 2–ந் தேதி(செவ்வாய்கிழமை) தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், 3–ந் தேதி(புதன்கிழமை) பொருளியல், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
இதை தொடர்ந்து 2–வது கட்ட கலந்தாய்வு வருகிற 8–ந் தேதி முதல் 10–ந் தேதி வரையிலும், 3–வது கட்ட கலந்தாய்வு 18–ந் தேதியும் நடக்கிறது.

Read more...

திங்கள், 24 ஜூன், 2013

கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான (2013-2014) மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று 24/06/2013 தொடங்குகிறது.

கடலூரில் உள்ள அரசு பெரியார்
கலைக் கல்லூரியில் 2013-2014-ஆம் கல்வியாண்டில் சேர 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று (24/06/2013) தொடங்குகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம். பாடப்பிரிவில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில்,


"கடந்தாண்டைவிட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தாண்டும் பி.காம். பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக பி.பி.ஏ. பாடப்பிரிவில் சேர விண்ணப்பிப்பார்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பி.காம். பாடத்தில் சேர அதிகளவில் விண்ணப்பிக்க காரணமாகும். கடந்தாண்டு கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பி.காம். பாடப்பிரிவைச் சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்' என்றார்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 17 மே, 2013

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக்  கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்கள் வாங்கிச் செல்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் அரசுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் அரசுக் கல்லூரிகளில் சேருவதற்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், பொறியியல் கல்லூரிகள் காரணமாக அரசுக் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. தற்போது அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆறு நாள்களில் இதுவரை 1,200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 11 மே, 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

கடலூர்:

    கடலூர்  பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.

     கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.  கடந்த 11-ம் தேதி வரை 400 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், 

        "விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.27. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களின் ஜாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலைக் காண்பித்து ஒரு விண்ணப்பம் மட்டுமே இலவசமாகப் பெறலாம். கூடுதலாக தேவைப்படும் விண்ணப்பத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். மற்ற வகுப்பினர் விண்ணப்பத்துக்குரிய பணத்தை செலுத்தி பெறலாம்.

      கடந்தாண்டு 6,000 விண்ணப்பங்கள் வரை விற்பனையாயின. இந்தாண்டு முதல் கட்டமாக 5,000 விண்ணப்பம் வரை அச்சிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றார்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 5 ஜூலை, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம்

கடலூர்:


       கடலூர் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் விற்பனை துவங்கியது.

        கடலூர், தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் தமிழ், பொருளியல், இயற்பியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  வரலாறு, ஆங்கிலம், கணிதம், தாவரவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர, நேற்று (4ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  கல்லூரி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் நேரில் வந்து 42 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்குள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும்.

Read more...

புதன், 20 ஜூன், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு - 800 மாணவர்கள் பங்கேற்பு

கடலூர் :


கடலூர் அரசு கல்லூரியில் நேற்று நடந்த கலந்தாய்வில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி., (கணிதம்), இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இன்று பயாலஜி, விலங்கியல், இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வு பற்றி கமிட்டி உறுப்பினர் மனோகரன் கூறுகையில்,

மொழிகல்வி தவிர, மூன்றாவது பாடப்பிரிவுகளில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார்.

 

Read more...

சனி, 16 ஜூன், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

கடலூர்:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 18ம் தேதி துவங்குகிறது.

பெரியார் கலைக்  கல்லூரி முதல்வர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில்  மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு  18ம் தேதி முதல் கட்டமாக (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னார் ராணுவத்தினர் பிள்ளைகள், தொழில் சார்ந்த கல்வி பயின்றவர்கள் நீங்கலாக) கலந்தாய்வு நடக்கிறது.


ஜூன் 19ம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல் (பொது) கணினி அறிவியல், புள்ளியியல் (பகுதி 3ல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டும்) 20ம் தேதி தாவரவியல், விலங்கியல், வேதியியல் (தொழில்முறை) கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு  நடக்கிறது.

ஜூன் 21ம் தேதி வணிகவியல் (பொது / தொழில் முறைக் கல்வியில்) அகடமிக், ஒக்கேஷனல் மாணவர்களுக்கு கலந்தாவு நடக்கிறது.பகுதி 1ல் தமிழ் பகுதி 2ல் ஆங்கிலம் பாடங்களில் 200 முதல் 70 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 22ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் (சிறப்புத் தமிழ், சிறப்பு ஆங்கிலம்) படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பொருளியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு 25ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் 28ம் தேதியும், வணிகவியல் பாடத்திற்கு 29ம் தேதியும், அனைத்து கலைப்பிரிவுகளுக்கும் 30ம் தேதியும் இரண்டாம் கட்ட கலந்தாவு நடக்கிறது. மேலும் காலி இடங்கள் இருந்தால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.

Read more...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வராண்டா மாணவர் சேர்க்கை

கடலூர் : 
         கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

              கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தது. கவுன்சிலிங் முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த மாதம் இரண்டு கட்டமாக நடந்தது. சேர்க்கையின் கடைசி நாளான நேற்று "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

            இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலையில் இருந்தே கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமையில் சேர்க்கை நடந்தது. முனைவர்கள் காந்திமதி, ஞானசேகரன், பழனிவேல், ஜெயந்தி தேவி உடனிருந்தனர்.

Read more...

செவ்வாய், 26 ஜூலை, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைப்பு

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

            "முதலாமாண்டு பி.ஏ.,- பி.எஸ்சி., - பி.காம்., வகுப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (27ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

Read more...

செவ்வாய், 28 ஜூன், 2011

கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

கடலூர்: 

            பெரியார் அரசு கல்லூரியில் 2011 - 2012 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலையில்   துவங்கியது.

              கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

           அதில் வேதியியல் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 

பி.காம். பாடப் பிரிவிற்கு கடும் போட்டி 

             பி.காம்., பிரிவில் உள்ள 120 இடங்களுக்கு 800 பேர் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 500க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வெள்ளி, 24 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவக்கம்

கடலூர் : 

      கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            கடலூர், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதற்கட்ட கவுன்சிலிங் வரும் 27ம் தேதி துவங்குகிறது. 

         அன்றைய தினம் இளமறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு நடக்கிறது. இளங்கலைத் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் துறைகளுக்கு 28ம் தேதி நடக்கிறது. இக் கவுன்சிலிங்கில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 501க்கு மேல் 800க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 120க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு.
 

            கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் காலை 9 மணிக்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சேர்க்கைக் கட்டணத்துடன் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரியில் சேர வரும் மாணவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை கட்டாயம் அழைத்து வர வேண்டும். இரண்டாம் கட்டமாக 4ம் தேதி நடக்கும் கவுன்சிலிங்கில் இளம் அறிவியல் துறைக்கும், 5ம் தேதி இளங்கலைத் துறைக்கும் நடக்கிறது. 

             இதில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 350க்கு மேல் 500க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 100க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. பகுதி 3ல் 350க்கு கீழ் மற்றும் மொழிப் பாடங்களில் 100க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Read more...

புதன், 18 மே, 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

கடலூர் : 

           கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. 

           தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முன்தினம் முதல் துவங்கியது. ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்றைய தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 

 விண்ணப்பக் கட்டணம் 

எம்.காம்., - எம்.எஸ்சி., பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் 43 ரூபாயும், 
பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., பாடப் பிரிவுக்கான விண்ணப்பம் 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP