வெள்ளி, 31 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாநில அளவிலான தமிழ் கருத்தரங்கு 29.01.2014 அன்று நடைபெற்றது.

29.01.2014 (புதன்கிழமை) அன்று  நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்  கொற்கை வேந்தன் வரவேற்றார். பேராசிரியர் அர்த்தநாரி அறிமுக உரையாற்றினார்.

புதுச்சேரி மாநில தமிழ் சங்கத் தலைவர் முத்து, கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். "சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும், நாட்டுப்புற மீனவர் பாடல்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடக்க விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 30 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கு 30.01.214 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைந்தது.











Read more...

திங்கள், 27 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான வேதியியல் திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியலில் மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு (SLPT-2014) 26.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளராக  பணியாற்றுவதற்கும், உதவித்தொகையுடன் கூடிய பி.எச்.டி.ஆய்வுப்படிப்பை மேற்கொள்வதற்கும்  ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் பல்கலைகழக மான்ய நல்கலைக்குழு தகுதித் தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் இரண்டு வாரகால இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க, மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு 26.01.2014 அன்று மாநிலம் முழுவதும் 6 மையங்களில் நடைபெற்றது. 

இத்தேர்வு கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில், கல்லூரியின் வேதியியல் துறையும், ராமசுப்பு ஜெயராமன் அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து முதல்வர்  விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இத்தேர்வில் கடலூர் மையத்தில்  பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளைச்  சேர்ந்த  முதுகலை வேதியியல் மாணவ, மாணவிகள் 60 பேர் பங்கேற்று இத்தேர்வை எழுதினர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான இந்த செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும் நாட்டுப்புற மீனவர் பாடல்களும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்குகிறது. 30-க்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கவுள்ளனர். கருத்தரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முத்துவேலு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் முனைவர் மகாலிங்கம் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றுகிறார். கருத்தரங்கின் தலைவராக கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளராக தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்கொற்கை வேந்தன் செயல்பட உள்ளனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 20 ஜனவரி, 2014

தொல்காப்பிய இலக்கியவியல் மரபுகளும் நவீனத் திறனாய்வு முறைகளும் என்ற தலைப்பில் பயிலரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் 19.02.2014 முதல் 28.012.2014 வரை நிகழ்த்தும் பயிலரங்கம்.

தலைப்பு:

தொல்காப்பிய இலக்கியவியல் மரபுகளும் நவீனத் திறனாய்வு முறைகளும்

பயிலரங்க ஒருங்கிணைப்பு:

முனைவர் கே.பழனிவேலு,
தமிழ் ஆய்வுத்துறை,
தமிழ் இணைப்பேராசிரியர்
பெரியார் கலைக் கல்லூரி.
கடலூர்,

Email: kpajanivelou@gmail.com


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளைஞர் ரெட்கிராஸ், இந்தியன் ரெட்கிராஸ் சங்கங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இளைஞர் ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல்குமார், இந்தியன் ரெட்கிராஸ் கடலூர் செயலாளர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் டேவிட் சவுந்தர், ராயப்பன், முனைவர் முகுந்தன், பாரி, பிள்ளைவேந்தன், இளவரசி, தியாகராஜன், தங்கவேல், தேனினியன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜெகதீசன் பேசுகையில்,

பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை உருவாக்கும் பணியினை கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதி மீறல்கள், போக்குவரத்து நெருக்கடிகள், பழுதடைந்த சிக்னல்கள் உள்ளிட்டவைகளை பார்த்த உடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு மாணவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சாலை விழிப்புணர்வு குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்தில் பேராசிரியர் அர்த்தநாரி, கவிஞர் வெற்றிச்செல்வி சண்முகம், மாணவர் விஜய், பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், பிரேமகுமாரி, மாணவி பெரியநாயகி ஆகியோர் பங்கேற்றனர். பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் இளங்கோ நடுவராக இருந்தார்.

Read more...

சனி, 11 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கடலூர் :

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நமது கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் 10.01.2014 அன்று சட்டமன்ற உறுப்பினர் கட்டடத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.





Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 4 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் விஸ்வநாதன் கூறியது: 

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவு நடப்புக் கல்வியாண்டில் புதிதாக துவங்கப்பட்டது. தற்போது முதலாமாண்டு வகுப்புகள் நடக்கிறது. இப்பாடப் பிரிவுக்கான இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாமாண்டு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புதிதாக வகுப்பறை கட்டுவதற்கு கடலூர் தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 21ம் தேதி, அழகிரி எம்.பி., அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை (கட்டடப் பிரிவு) சார்பில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரைத் தளம் மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில், பேராசிரியர்கள் அறை, இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் மூன்று அறைகள் அமைக்கப்படுகிறது
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP