புதன், 27 ஆகஸ்ட், 2014

பல்கலைக் கழக மானிய நிதிநல்கை குழுவின் உதவியுடன்அரசியல் அறிவியல் துறையின் சார்பாக “இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு: அரசின் நிர்வாகத்தில் உள்ள சவால்களும்” எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

          கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில்  பல்கலைக் கழக மானிய நிதிநல்கை குழுவின் உதவியுடன்அரசியல் அறிவியல் துறையின் சார்பாக “இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு: அரசின் நிர்வாகத்தில் உள்ள சவால்களும்” எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 2014 - 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
          துவக்கவிழாவில் பேரா.வி.இராயப்பன்அரசியல் அறிவியல் துறைத்தலைவர் அனைவரையும் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் பேசுகையில் “உணவுப் பாதுகாப்புக் கொள்கை” எனும் தலைப்பில் உலக உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் (FAO) அறிக்கையின்படி ஏழை விவசாயிகளுக்கான மானியம் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தவறிவிட்டது என்றும் மேலும் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பா.ஜ.க. அரசின் நிலைகளை எடுத்துரைத்தார்.
            சிறப்பு விருந்தினர் முனைவர்.ப.சக்திவேல் (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) பேசுகையில் உணவுப் பாதுகாப்புத் சட்டம்-2013 ன் சிறப்புகளையும் பொதுவினியோகத் திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். 
    இக்கருத்தரங்கத்தின் ஆய்வுக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் வெளியிட சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல் அவர்கள் பெற்றுக்கொண்டார். 
         இக்கருத்தரங்கிற்கு பெங்களுர் கேரளா பீஹார் மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். கருத்தருங்கின் இறுதியில் திரு.ப.இளவரசன் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் நன்றியுரை கூறினார்.





கருத்தரங்கம் குறித்து தினமலா் நாளிதழ்(புதுச்சோி )
 செய்தியும் புகைப்படமும் 28.08.2014


Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

National Seminar on “Food Security in India: Challenges in Administration and Governance”

         Periyar Government Arts College, Cuddalore conducted a UGC sponsored National Seminar on “Food Security in India: Challenges in Administration and Governance” during 27 & 28th August 2014. In his welcome address Prof.V.Rayappan, HOD of Political Science welcomed the gatherings. 
        There are participation from Bangalore, Andra Pradesh, Kerala, Bihar and Chennai. During the inaugural function Principal, Periyar Arts College emphasized the need for continuity of Food Security policy of the previous UPA Government and the newly elected BJP Government. He observed, that the negotiating skills of Indian representatives at WTO-and FAO are abysmally ineffective in securing the interests of Indian farmers in the context of subsidy, minimum support price and insurance. 
      The Chief Guest Dr.P.Sakthivel spoke on the various advantages of Food Security Act-2013 and called for removing the bottlenecks of administration of PDS in India. At the end of the inaugural function Mr.Thiyagarajan, Assistant Professor of Microbiology extended a vote of thanks. There are 300 participating students 30 participant outside Cuddalore. The event marked by publication of Seminar proceedings in the form a book. The book was released by Principal and the first copy received by Dr.P.Sakthivel, Annamalai University. There was also a book exhibition on Social Sciences.




Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

புதன், 20 ஆகஸ்ட், 2014

கணினி அறிவியல் துறை மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மாணவிகளுக்கான இணையதள பயிற்சி முகாம்

Read more...

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

68-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் –பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு சுநத்திர தின விழா- சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நம் கல்லூாி முதல்வா் வ.நா.விஸ்வநாதன் தேசியக்கொடியேற்றி சிறப்புப் பேருரை


       இந்தியா சுதந்திரமடைந்து இன்று நாம் 68-ஆம் ஆண்டில் உள்ளோம். சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைத்து நம் நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கும் பொறுப்பை நாம் கடைபிடிக்க வேண்டிய தருணமிது.
          உலக அரங்கில் இன்று இந்தியா ஒரு பலம் மிக்க நாடாக திகழ்கின்றது. நம் இந்திய நாட்டின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் உச்ச கட்டத்தை எய்த நம்மால் முடிந்த பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
          பல்வேறு சமூக பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை சந்தித்த நம் நாடு மக்களாட்சி மகத்துவத்தை சிறப்பாக வேரூன்றி தழைக்க சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.
      இந்திய சுதந்திர ஆண்டில் கிராமப்புற வளர்ச்சியில் புதிய உத்வேகத்தை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இத்தருணத்தில் மூன்று அடிப்படையிலான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
                    1. பரவலாக்கப்பட வேண்டிய கல்வி   
                    2.கிராம வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்
                  3. மக்களின் தேவைக்கேற்ப சுற்று சுழ்நிலையை பாதுகாத்தல்.
                  4. நல்லரசு மற்றும் வெளிப்படையிலான நிர்வாகம்.
                 5. பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு ஆகும்.

       “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கு வழிவகை வேண்டும். மிக பரந்தயளவில் அனைவரும் அரசியலில் பங்கேற்று மக்களாட்சி மரபுகளை போற்ற வேண்டும்.
     கூனி நிற்கும் கிராம மக்களின் வாழ்வில் வசந்தமாக சுதந்திர காற்று வீசி புதிய பாதையை உருவாக்க வேண்டும்.
      பாரத தாயே உன் காலை தொட்டு வணங்குவதில் உயிர்க்கு நடு அர்த்தத்தை உணர்கிறேன்.
ஜெய் ஹிந்த்!


68th year of India’s Independence Celebrated at Periyar Arts College, Cuddalore

We are proudly celebrating the 68th year of India’s independence. We are in an important phase wherein we to sustain our national integration even as we pay rich homage to the martyrs who laid down their invaluable lives in the struggle for India’s independence.
Today India is recognized as a potential power among the other countries of the world. We have to put forward our utmost efforts in order to make our country reach the pinnacle of glory in the political, economical and social spheres.
Our county has successfully overcome several social, economic and political challenges and has deeply entrenched within itself the significance of the spirit of democracy. Further, our country has created a conducive atmosphere for democracy to flourish.
In this eventful 68th year of India’s independence our Central and State Governments must instill a fresh viguour towards the development of our villages. At this juncture we have to encounter three fundamental problems.
1.  To ensure wide spread knowledge
2.  To ensure rural employment and fulfill our basic necessities.
3. To conserve our environment according to the needs of the people.
4.  Ensure good governance and transparent administration.
5.  Ensure economic growth and security for women.
India is a country which epitomizes “Unity in diversity”. We Indians have to ensure religious tolerance in keeping with our highest ideal of unity in diversity. All of us have to participate in the political process and cherish the noble ideas of democracy.
Let the sweet spring-time breeze of freedom flow into the decrepit lives of our villages and pave a way for their upliftment.
O Mother India! I realize the essence of my life in respectfully touching your feet and paying obeisance to you.
JAI HINDH


























               



Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 13 ஆகஸ்ட், 2014

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சா்வதேச அளவிலான ”திருநங்கைகளுக்கான மனித உாிமைகள்” பயிலரங்கத்தில் நம் கல்லூாி முதல்வா். வ.நா.விஸ்வநாதன்.


 புதன், ஆகஸ்ட் 13, 2014-தி இந்து தமிழ்,



திருநங்கைகளுக்கான மனித உாிமைகள் குறித்து விவாதித்தல்




Read more...

தாய்ப்பால் வார விழா-“தாய்ப்பால் ஊட்டல் வாழ்க்கையை வெல்வதற்கான வழி”

   கடலூர், பெரியார் கலைக் கல்லூயில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சார்பில் தாய்ப்பாலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 07.08.2014 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

       பெண் குழந்தைகளுக்கு நம் நாட்டில் பாலூட்டுவதில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலூட்டும் நிலை கிராமங்களில் அதிகமாகவும் நகர்ப்புறங்களில் இந்நிலை வெகுவாக குறைந்து வருகின்றது. நம் நாட்டில் குறிப்பாக பெரு நகரங்களில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படத்துவங்கியுள்ளது. இந்த வங்கிகளின் மூலமாக தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள் தொற்று நோய்களினால் அவதியுறும் தாய்மார்கள் பிறந்தவுடன் தாயினை இழந்த குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இதுபோன்ற தாய்பால் வங்கிகள் மிகவும் பின்தங்கிய  வறுமையில் வாழும் தாய்மார்கள் அதிகம் வசிக்கும் இக்கடலூர் மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விழாவிற்கு தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து விழாவிற்கு சிறப்புரையாற்றிய இளைஞர் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசியருமான முனைவர்.கு.நிர்மல்குமார் தாய்ப்பால் குழந்தையின் பசியை மட்டும் போக்கவல்லது அல்ல. அதிலுள்ள உயிர் ஊட்டச்சத்துக்கள் லேக்டோஸ்ää மாவுச்சத்து கொழுப்பு வகைகள் போன்றவை குழந்தையின் வளர்;ச்சிக்கு அவசியம் தேவை. முறைப்படி தாய்மார்கள் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டினால் குழந்தைக்கு ஏற்படும் குறைபாடுகளில் 40மூ அறவே தவிர்க்கலாம். தாய்ப்பாலிலுள்ள அமினோ அமிலங்கள் மூளை வளர்;ச்சிக்கு இன்றியமையாததாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயிற்றுப்போக்கு காதில் சீழ்வடிதல் தோல் தொற்று போன்றவை தடுக்கப்படும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தரும் சீம்பாலால் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் இறப்பதை தடுப்பதோடு இறப்பு விகிதத்தையும் குறைக்கிறது. 

           தாய்ப்பால் குழந்தைக்கு மட்டும் நன்மை பயப்பதோடு நிறுத்திவிடாமல் தாய்பால் கொடுக்கும் தாய்க்கும் நன்மை பயக்கிறது. மேலும் மார்பக புற்று நோய் சினைப்பை புற்றுநோய் சத்துக்குறைவு போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பல அறிவியல் ஆராய்ச்சிகள் நிருபிக்கின்றன. இதனால்தான் இவ்வாண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து “தாய்ப்பால் ஊட்டல் வாழ்க்கையை வெல்வதற்கான வழி” என்பதாகும் என்று தெரிவித்தார்.

            இவ்விழாவில் தாவரவியல் துறைத்தலைவி முனைவர்.கீதாதேவி வரவேற்றார். விழாவின் இறுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பபணித்திட்ட அலுவலர் பேராசிரியை மா.ஞானாம்பிகை நன்றி கூறினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆவலுடன் பங்கேற்று பயன்பெற்றனர். 



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

Two days UGC-Sponsored National Seminar on “Food Security in India: Challenges in Administration and Governance” on 27, 28 August 2014



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP