ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு

கடலூர் :

           கடலூர் அரசு கல்லூரி மாணவர்களின் கறுப்புக் கொடி போராட்ட அறிவிப்பால் நேற்று நடந்த இலவச  மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை. அரசு கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருகிறது. கடந்தாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

          இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 933 பேருக்கு வழங்குவதற்காக லேப்டாப் தயார் நிலையில் உள்ளது.இதனை அறிந்த 3ம் ஆண்டு மாணவர்கள், முதலில் தங்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 26ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இந்நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சம்பத், லேப் டாப் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

           ஆவேசமடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடந்த 27ம் தேதி கல்லூரியிலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கப்படும் என்றனர். அதனை ஏற்க மறுத்த மாணவர்கள், லேப் டாப் வழங்க கல்லூரிக்கு வருகை தரும் அமைச்சர் சம்பத்திற்கு எதிராக கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் வழங்க நேற்று ஏற்பாடு செய்தனர். அதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களை மட்டும் கல்லூரிக்கு வருமாறு அறிவித்தது. ஆனால், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று காலையிலேயே கல்லூரியில் கூடினர். காலை 10 மணிக்கு கல்லூரி உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                கல்லூரி முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த தகவலை அறிந்த அமைச்சர் சம்பத்,கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்கவில்லை. சப் கலெக்டர் லலிதா, 8 மாணவர்களுக்கு மட்டும்இலவச லேப் டாப்களை வழங்கினார். மற்றவர்களுக்கு நாளை (31ம் தேதி) வழங்கப்படும் என கூறிவிட்டுச் சென்றார். விழாவிற்கு வந்த சப் கலெக்ட ரும், தங்களின் கோரிக்கையை என்ன என்றுகூட கேட்காததால் நாளையும் போராட்டத்தைத் தொடர மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். .

Read more...

வியாழன், 27 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி சாலை மறியல்

கடலூர்:

          பெரியார் கலைக் கல்லூரி அனைத்துத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி  வழங்க வலியுறுத்தி கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரில் நாளை (28ம் தேதி) இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில்  கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் 870 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி  வழங்காமல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதைக் கண்டித்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரியிருந்து ஊர்வலமாகச் சென்று பாரதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

           தகவலறிந்த தாசில்தார் எழிலன் மற்றும் கடலூர் புதுநகர் போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.  பின்னர் மாணவர்களின் பிரதிநிதியான ராமு தலைமையில் மாணவர்கள் கலெக்டர் கிர்லோஷ்குமாரை சந்தித்து, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 21 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு




கடலூர்:


    கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா   20/12/2012 அன்று  நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை பேராசிரியர் கண்ணன் வரவேற்றார்.

தேசிய பல்லுயிர் பன்மைய வாரியத் தலைவர் ராமானுஜம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில்,

     தமிழக அரசு மாணவர்களிடையே பன்முக ஆளுமைத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை அளிக்கிறது. வேற்று மொழியினர் தமிழ் மொழியை தைரியமாக பேசுகின்றனர். இதேப் போன்று ஆங்கில மொழியை தைரியமாக பேச நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பயிற்சி வகுப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விளக்கம் அளித்தார். பயிற்சி வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியர் நிர்மல்குமார் செய்திருந்தார். பயிற்சி வகுப்பு 22/12/2012  அன்று முடிவடைகிறது.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 13 டிசம்பர், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் விபரம் (2012) - Periyar Arts College Department of Tamil - Lectures Details 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர்கள் விபரம்(2012)  - (Cuddalore Periyar Arts College - Department of Tamil Lectures Details 2012)


Name Of The Staff
Designation
Date of appointment
Date of join in this College
Qualification
DOB
Dr. S. Tamizhazhi Korkkai Vendan
Asso. Prof. &Head
05.03.1985
30.06.1995
M.A.,M. Phil., Ph. D.,
06.03.1958
31.03.2016
Prof.  A. Arthanari  
Asst. Professor
11.10.1988
01.11.1993
M.A.,M. Phil., B. Ed.,
15.08.1958
31.08.2016
Dr. B. Kumaran 
Asst. Professor
02.09.1996
02.09.1996
M.A., M. Phil., Ph. D.,
06.07.1961
31.07.2019
Dr. K. Pajanivelou 
Asst. Professor
22.10.1998
22.10.1998
M.A., M.A., B. Ed., Ph. D.,
25.06.1966
30.06.2024
Dr.  B. Geetha 
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A.,M. Phil.,Ph. D.,
29.06.1968
30.06.2026
Dr.  V. Panneer Selvam 
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A., M. Phil., B. Ed., Ph. D.,
15.06.1965
30.06.2022
Dr.  N. Baskaran 
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A.,M. Phil., Ph. D.,
30.04.1965
30.04.2023
Prof.  S. Ilango
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A., M. Phil., Ph. D., Dip.in Anthr. & Folkrore
15.05.1968
31.05.2026
Prof.  S. Vishnudasan
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A., M. Phil., Cert in Hindi, Malayalam, Anthr.
21.06.1963
30.06.2021
Dr. S. Prema Kumari 
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A., M. Phil., B. Ed., Ph. D.,
05.05.1969
31.05.2027
Dr. D. Veni
Asst. Professor
26.12.2007
26.12.2007
M.A., M. Phil., B. Ed., Ph. D.,
03.03.1976
31.03.2034
Dr. J. Poorani 
Asst. Professor
09.7.2009
09.7.2009
M.A., M.A.,(Ling),Ph. D.,
22.08.1974
30.08.2032
Dr.  C. Elumalai 
Asst. Professor
09.7.2009
09.7.2009
M.A., M.A.,(Ling),M. Phil., Ph. D.,
22.01.1969
31.01.2037
Dr.  K. Kavitha 
Asst. Professor
09.7.2009
09.7.2009
M.A., M. Phil., Ph. D.,
22.05.1974
31.05.2032
Dr. J. Syamala
Asst. Professor
26.02.2011
26.02.2011
M.A., M.A.,(Ling),M. Phil., Ph. D.,
24.09.1968
30.09.2026

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP