செவ்வாய், 29 ஜூன், 2010

பெரியார் கல்லூரியில் கவுன்சிலிங் நடப்பதாக மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

கடலூர்: 

              கவுன்சிலிங் நடப்பதாக கிடைத்த தவறான தகவலால் கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

               கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ஆம் கல்வியாண்டிற் கான கவுன்சிலிங் முதல் கட்டமாக 17, 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21, 22ம் தேதியும் நடந்தது. இதில் பி.எஸ். சி., பி.காம், பி.ஏ., உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தமுள்ள 881 இடங் களுக்கு 4,329 பேர் விண்ணப்பித்தனர். அதில் 684 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங் மூலம் சேர்க்கப் பட்டனர்.இந்நிலையில் பெரியார் கல்லூரில் நேற்று மீண்டும் கவுன்சிலிங் நடப்பதாக கூறி 300க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். இந்நிலையில் கல்லூரியில் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லை என போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களும் கல்லூரி முன் திரண்டனர்.

              இதனையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் இன்று (நேற்று) மாணவர்கள் சேர்க்கை இல்லை. எனது தலைமையில், பேராசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப் பட்டு மாணவர்கள் சேர்க்கைக் கான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முதல்வர் ரங்கநாதன் கூறுகையில், "

                  இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது. இரண் டாம் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்படாத மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி பின்னர் கூறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தவறாக புரிந்து கொண்ட மாணவர்கள் இன்று (நேற்று) கலந்தாய்வு நடக்கும் என கல்லூரிக்கு பெற்றோருடன் வந்திருந்தனர். மேலும் இதுவரை எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. மேலும் பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 200 இடங் கள் காலியாக உள்ளன. கலந் தாய்வு கூட்டத்திற்குப் பின் பி.சி., மாணவர்கள் வரவில்லை எனில் அவர்களுக்கு பதில் எம்.பி.சி., - எஸ்.சி., உள்ளிட்ட மாணவர்களுக்கு சேர்க்கை இடம் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்படும்' என்றார்.


Read more...

வியாழன், 17 ஜூன், 2010

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்

கடலூர்: 

               கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2010-2011ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு இன்றும், நாளை 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21 மற்றும் 22ம் தேதி நடக்கிறது. 

                  இன்று காலை துவங் கும் முதல் கட்ட கலந் தாய்வில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கும், நாளை 18ம் தேதி பி.காம்.,- பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங் கில இயக்கியம், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் நடக்கிறது. பிளஸ் 2 பொது பாடப்பிரிவில் பகுதி மூன் றில் 800க்கு 500 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், தமிழ், ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவிற்கு மொழிப் பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இக்கலந் தாய்வில் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கு விண்ணபித்து கடிதம் கிடைக்காதவர்கள் கலந் தாய்வு நடக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், டி.சி., ஜாதி மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ், சேர்க்கைக்கான கட்டணம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். 

                    இரண்டாம் கட்ட கலந் தாய்வு 21ம் தேதி பி.எஸ். சி., பாட பிரிவிற்கும், 22ம் தேதி பி.காம்.,- பி.ஏ., பாட பரிவிற்கு நடக்கிறது. இதற்கு பொது பிரிவு பகுதி மூன்றில் 800க்கு 500க்கு மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு மொழி பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP