புதன், 10 பிப்ரவரி, 2016

கடலூா் பொியாா் அரசு கல்லூாியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் 09.02.2016-திங்கள்கிழமையன்று நடைபெற்றது.

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. கடலூரில் மழை பாதிப்பால் அரசு மருத்துவமனையின் இரத்த வங்கிக்கு மாவட்ட அளவில் அதிகம் இரத்தம் தேவைப்படுவதாலும் அன்றாடம் விபத்துகள் ஏற்பட்டு விபத்துக்குள்ளானோரின் உயிர் காக்கும் பொருட்டு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வ மாணவஃமாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் குருதி கொடையளித்தனர்.
            முன்னதாக குருதி கொடையினை கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையேற்று துவங்கி வைத்தார்கள். முகாமில் பேசிய முதல்வர் குருதியானது சுழற்சிக்கே எனவே குருதிகொடை வழங்குங்கள்என்ற வாசகத்தை முன்மொழிந்தார். பேராசியர் முனைவர்.கு.நிர்மல்குமார் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்.
            பேரா.ம.ஆனந்தராஜ் YRC திட்ட அலுவலர் அவர்கள் நன்றியுரையாற்றினார். முகாமில் கடலூர் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் சாய்லீலா மற்றும் அவரது குழுவினர் கலந்துகொண்டனர். முகாமில் 150-க்கும் மேலான மாணவ மாணவிகள் குருதி கொடையளித்தனர்.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 6 பிப்ரவரி, 2016

ICMR - பொது நலம் மற்றும் சுகாதாரம் கருத்தரங்கு:"ஜிகா வைரஸை கட்டுபடுத்தும் சக்தி இந்தியாவிடம் உள்ளது"

Read more...

வியாழன், 4 பிப்ரவரி, 2016

கடலூா் பொியாா் கலைக்கல்லூாியில், ICMR நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேசிய கருத்தரங்கு “பொதுநலம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் (04.02.2016 மற்றும் 05.05.2016) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.


ICMR நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேசிய கருத்தரங்கு “பொதுநலம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் தனது தலைமையுரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் திட்டங்கள் முழுமை பெறஉதவும் என்றும்ää கடந்த சில ஆண்டுகளாக கடலூர் பெரியார் கலைக்கல்லூரியின் பல்வேறு துறைகளில் காணலாகும் தேசிய கொள்கைகளைப் புலப்படுத்தும்; நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. விலங்கியல் துறை ஏழை எளிய மக்களுக்காக பொது நலன் மற்றும் சுகாதாரம் தொடர்பாக புதுமையான சிந்தனைகளை இக்கருத்தரங்குகளில் முன்வைக்கும்.
உலக சுகாதார கொள்கைகளை நிறைவேற்றும் இந்தியாவிற்கு பல்வேறு இடர்பாடுகள் காணப்படுகின்றன. வல்லுநர்கள்ää கொள்கை உருவாக்குபவர்களிடம் அறிவு பற்றாக்குறை இருப்பதாக கருதுகின்றேன். அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டிப்பாக கொள்கை உருவாக்குவதற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
தேசிய சுகாதாரம் புதிய சவால்களை சமாளிக்கும் நிலையில் இருக்கிறது. அரசு GDP-ல் 1.04 சதவீதம் சுகாதாரத்திற்கு செலவிடுகின்றது.
              1. இந்தியாவில் உலக சுகாதார நிலைமைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்.
              2. சுகாதார கொள்கைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
              3. தரமான சுகாதார சேவை இடம்பெறுதல் அவசியம்
     4. உலக நோய்களான எபோலா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பாக குறைவான விழிப்புணர்வே உள்ளது.
        5. மற்ற பிற நாடுகளிலிருந்து இது பரவாமல் தடுக்க உலக சுகாதார அமைப்பு பாடுபடுகின்றது.
ஜிகா வைரஸின் அபாயங்கள்
1. குழந்தைகளை தாக்கும்
2. பிளசண்டாவில்; வைரஸ் இடம்பெறும்
3. ஏடிஸ் கொசுக்கள் மூலம் தொற்று ஆகும்.
பொது சுகாதாரம் கொள்கையாளர்களுக்கும் மற்றும் உருவாக்குபவர்களுக்கும் பிரச்சனையாகத் திகழ்கின்றது. சுகாதாரம் அடிப்படை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையாகும். சராசரியாக இந்திய நாடு GDP-யில் 5 சதவீதம் பொது சுகாதாரத்திற்கு செலவு செய்கின்றது.
வரிசீர்திருத்தக்குழு புகையிலை மற்றும் மதுவிற்கு அதிக வரி விதித்து அதனை சுகாதாரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.
இந்திய தேசிய சுகாதார திட்டத்தின் அனைவருக்குமான பயன்கள் கிட்ட திட்டமிடப்படுகின்றது. ஆப்பிரிக்க திட்டத்தின் மூலம் இந்திய அரசு வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இது கோடிக்கனக்கான கிராமங்களுக்கு பயன்படும்.
பொது சுகாதாரத்திட்டம் பின்வரும் கொள்கைகளை உடையது.
1. சமமானது
2. பரந்துபட்டது
3. பன்மயத்தன்மை வாய்ந்தது
4. நம்பிக்கையூட்டக்கூடியது
5. பரவலாக்கப்பட்டது.
ஒவ்வொரு சுகாதாரத்திட்டமும் அந்;தந்த மாநிலம் மற்றும் தேசிய அளவில் தேவைக்கேற்றவாறு செயல்படுத்தப்படும். நமது சுகாதாரம் என்பது ஒவ்வொரு பிறக்கும் குழந்தையை இறப்பதிலிரந்து காப்பாற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பொது மற்றும் தனியாரின் பங்களிப்புடன் பொதுநலம் மற்றும் சுகாதார திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனை தேசிய தர நிர்ணய கழகம் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவ நடைமுறைச் சட்டம்-2010 இதனைச் செயல்படுத்த வேண்டும். சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமானது கிராமப்புற மக்கள் தொகைக்கேற்ப ஏற்படுத்த வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் பொது சுகாதார திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
இக்கருத்தரங்க மாநாட்டினை விலங்கியல் துறைத்தலைவர் முனைவர்.ரா.கண்ணன் அவர்களும், கருத்தரங்க செயலர் முனைவர்.கு.அருள்தாஸ் அவர்கள் செய்தனர்.










Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP