முதல்வர் சத்தியமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் சத்தியமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வராண்டா மாணவர் சேர்க்கை

கடலூர் : 
         கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

              கடலூர், தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் நடந்தது. கவுன்சிலிங் முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை கடந்த மாதம் இரண்டு கட்டமாக நடந்தது. சேர்க்கையின் கடைசி நாளான நேற்று "வராண்டா' சேர்க்கை நடந்தது. 

            இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் காலையில் இருந்தே கல்லூரியில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமையில் சேர்க்கை நடந்தது. முனைவர்கள் காந்திமதி, ஞானசேகரன், பழனிவேல், ஜெயந்தி தேவி உடனிருந்தனர்.

Read more...

புதன், 13 ஜூலை, 2011

கடலூர் பெரியார் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா

கடலூர் : 

              கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது. 

              விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பேராசிரியர்கள் விளக்கினர். 

தொடர்ந்து கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி பேசுகையில்,

             மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் பேராசிரியர்கள் கல்வியை போதிப்பார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். விழாவில் வரலாற்று பேராசிரியர் காந்திமதி உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more...

செவ்வாய், 28 ஜூன், 2011

கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

கடலூர்: 

            பெரியார் அரசு கல்லூரியில் 2011 - 2012 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலையில்   துவங்கியது.

              கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

           அதில் வேதியியல் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 

பி.காம். பாடப் பிரிவிற்கு கடும் போட்டி 

             பி.காம்., பிரிவில் உள்ள 120 இடங்களுக்கு 800 பேர் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 500க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP