கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம்
கடலூர்:
கடலூர் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் விற்பனை துவங்கியது.
கடலூர், தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் தமிழ், பொருளியல், இயற்பியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரலாறு, ஆங்கிலம், கணிதம், தாவரவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர, நேற்று (4ம் தேதி) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் நேரில் வந்து 42 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்குள் கல்லூரிக்கு வந்து சேர வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக