கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் சேர கடும் போட்டி
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நடந்த கலந்தாய்வில் கணினி அறிவியல் பாடத்தில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் கடந்த 25-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. கணிதம், கணினிஅறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்வற்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
இதன் காரணமாக கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து இடங்களும் பூர்த்தியானது. புள்ளியியல் பாடத்துக்கு மாணவர்கள் குறைவாக வந்திருந்தனர். இதில் 4 மாணவர்கள மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக