கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம்
அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவ,
மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல்
வழங்கப்படுகிறது. கடந்த 11-ம் தேதி வரை 400 விண்ணப்பங்கள்
விற்பனையாகியுள்ளன.
இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில்,
"விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க
வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.27. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களின்
ஜாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலைக் காண்பித்து ஒரு விண்ணப்பம்
மட்டுமே இலவசமாகப் பெறலாம். கூடுதலாக தேவைப்படும் விண்ணப்பத்துக்குப் பணம்
செலுத்த வேண்டும். மற்ற வகுப்பினர் விண்ணப்பத்துக்குரிய பணத்தை செலுத்தி
பெறலாம்.
கடந்தாண்டு 6,000 விண்ணப்பங்கள் வரை விற்பனையாயின. இந்தாண்டு முதல்
கட்டமாக 5,000 விண்ணப்பம் வரை அச்சிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும்
பட்சத்தில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக