கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவக்கம்
கடலூர் :
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் 27ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 2011-12ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதற்கட்ட கவுன்சிலிங் வரும் 27ம் தேதி துவங்குகிறது.
அன்றைய தினம் இளமறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கு நடக்கிறது. இளங்கலைத் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் துறைகளுக்கு 28ம் தேதி நடக்கிறது. இக் கவுன்சிலிங்கில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 501க்கு மேல் 800க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 120க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு.
கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் காலை 9 மணிக்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சேர்க்கைக் கட்டணத்துடன் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரியில் சேர வரும் மாணவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை கட்டாயம் அழைத்து வர வேண்டும். இரண்டாம் கட்டமாக 4ம் தேதி நடக்கும் கவுன்சிலிங்கில் இளம் அறிவியல் துறைக்கும், 5ம் தேதி இளங்கலைத் துறைக்கும் நடக்கிறது.
இதில் பகுதி 3ல் உள்ள பாடப்பிரிவுகளில் 350க்கு மேல் 500க்குள் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மொழிப் பாடத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்குரிய பாடத்தில் 100க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. பகுதி 3ல் 350க்கு கீழ் மற்றும் மொழிப் பாடங்களில் 100க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக