கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் அரசுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் அரசுக் கல்லூரிகளில் சேருவதற்கு கடும் போட்டி நிலவியது. ஆனால், பொறியியல் கல்லூரிகள் காரணமாக அரசுக் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.
தற்போது அரசுக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆறு நாள்களில் இதுவரை 1,200 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக