கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 18ம் தேதி துவங்குகிறது.
பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு 18ம் தேதி முதல் கட்டமாக (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னார் ராணுவத்தினர் பிள்ளைகள், தொழில் சார்ந்த கல்வி பயின்றவர்கள் நீங்கலாக) கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 19ம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல் (பொது) கணினி அறிவியல், புள்ளியியல் (பகுதி 3ல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டும்) 20ம் தேதி தாவரவியல், விலங்கியல், வேதியியல் (தொழில்முறை) கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 21ம் தேதி வணிகவியல் (பொது / தொழில் முறைக் கல்வியில்) அகடமிக், ஒக்கேஷனல் மாணவர்களுக்கு கலந்தாவு நடக்கிறது.பகுதி 1ல் தமிழ் பகுதி 2ல் ஆங்கிலம் பாடங்களில் 200 முதல் 70 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு 22ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் (சிறப்புத் தமிழ், சிறப்பு ஆங்கிலம்) படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பொருளியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவில் பகுதி 3ல் 800 முதல் 280 வரை எடுத்தவர்களுக்கு 25ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் 28ம் தேதியும், வணிகவியல் பாடத்திற்கு 29ம் தேதியும், அனைத்து கலைப்பிரிவுகளுக்கும் 30ம் தேதியும் இரண்டாம் கட்ட கலந்தாவு நடக்கிறது. மேலும் காலி இடங்கள் இருந்தால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக