கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான் முதுகலைப் பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்குவது 13-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக எம்.எஸ்சி. கணிதப் பாடத்தில் சேர 96 விண்ணப்பங்களும், எம்.காம். பாடத்துக்கு 92 மற்றும் இதர பாடப்பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 1,100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பில் சேர வரவழைக்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களும் விற்பனையாகி விட்டது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது அதிகம். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான மாணவ, மாணவிகளை கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடக்கிறது என்றார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக