கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது
கடலூர்:
பெரியார் அரசு கல்லூரியில் 2011 - 2012 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலையில் துவங்கியது.
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதில் வேதியியல் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
பி.காம். பாடப் பிரிவிற்கு கடும் போட்டி
பி.காம்., பிரிவில் உள்ள 120 இடங்களுக்கு 800 பேர் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 500க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக