கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான
(2013-2014) மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று 24/06/2013
தொடங்குகிறது.
கடலூரில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014-ஆம் கல்வியாண்டில் சேர 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று (24/06/2013) தொடங்குகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம். பாடப்பிரிவில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில்,
"கடந்தாண்டைவிட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தாண்டும் பி.காம். பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக பி.பி.ஏ. பாடப்பிரிவில் சேர விண்ணப்பிப்பார்கள்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பி.காம். பாடத்தில் சேர அதிகளவில் விண்ணப்பிக்க காரணமாகும். கடந்தாண்டு கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பி.காம். பாடப்பிரிவைச் சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்' என்றார்.

கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக