திங்கள், 26 ஆகஸ்ட், 2013

திருவள்ளுவர் பல்கலைக் கழக கடலூர் மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம்



திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில், கடலூர் மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பிரிவுக்கான ஹாக்கிப் போட்டி அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், உடற்கல்வித் துறை பொறுப்பாசிரியர் வண்ணமுத்து, தமிழ்த் துறைத் தலைவர் தமிழாழிக் கொற்கைவேந்தன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி

கடலூர்:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி இன்று 26/08/2013 பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. 

இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: 

 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் இன்று 26/08/2013 தேதி காலை 9 மணிக்கு, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடக்கிறது. போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பரிந்துரை செய்யப்படுவர். இப்போட்டிக்கான கடிதங்கள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய படிவத்தில் முதல்வரின் பரிந்துரையுடன், ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அல்லது கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கைவேந்தன் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 24 ஆகஸ்ட், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கடலூர்:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அனைத்து துறைகளை சேர்ந்த மாணவர்களும் வெள்ளிக்கிழமை 23/08/2013 வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 67-வது இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம் - The 67th Independence Day celebration’s was held in Cuddalore Periyar Arts College


The 67th Independence Day celebration’s was held in the College premises at 9.00 A.M. The programme started with Thamizhthai vazhthu. It was followed by the hoisting of the National flag by the Prof. R.Jayanthidevi, Head of the Department of Zoology; in the speech she emphasized the importance of education and discipline in the student community. The essence of Independence Day is in understanding the real spirit of Independence. 

 Dr. V. N. Viswanathan, Principal of Periyar Arts College paid rich tributes to the martyrs who strived hard for achieving independence. The thrust of his speech was on “Providing Power to the Powerless”. He further highlighted the significance of inclusive growth where all sections of the society had an equal opportunity to develop. Eradication of poverty and casteism would pave the way for progress; Indian’s success largely depended on the preserving its diversity, working towards unity in diversity was important. Further, India’s foreign policy should pursue aggressive diplomacy in dealing with countries like Pakistan and China. India could play a leading Security Manager role in Asian continent. Yet another aspect that needed to be highlighted was protecting consumer and human rights. Sustaining democracy and decentralization of political powers through Panjayat Raj institutions is another strategy for India’s democracy. In the context of Food Security Act 2013, the Principal reinstated the statement of Honorable Chief Minister of Tamil Nadu that the public distribution system must be effectively secured for providing food all the poor.




Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 17 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - புகைப்படங்கள்

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் புகைப்படங்கள் 



தேசியக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் வி. ராயப்பன்



தேசியக் கருத்தரங்கில் தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன்




சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன் அவர்கள், அருகில் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
 
 

தேசியக் கருத்தரங்க துவக்கவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் புதுதில்லி இந்திய வரலாற்றாய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்க நிறைவுவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள்
 
 


தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு நன்றி கூறுகிறார் தேசியக் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்

Read more...

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான் முதுகலைப் பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 கல்வி ஆண்டிற்க்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பு  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ல் நடைபெறவுள்ளது. 

இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்குவது 13-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், அதிகபட்சமாக எம்.எஸ்சி. கணிதப் பாடத்தில் சேர 96 விண்ணப்பங்களும், எம்.காம். பாடத்துக்கு 92 மற்றும் இதர பாடப்பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 1,100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்பில் சேர வரவழைக்கப்பட்ட 1,100 விண்ணப்பங்களும் விற்பனையாகி விட்டது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது அதிகம். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான மாணவ, மாணவிகளை கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடக்கிறது என்றார். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 14 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி கலந்து கொண்டு தாய்ப்பால் குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம், அதனால் குழந்தைகள் எவ்வாறு ஆரோக்கியமாக வளரும் போன்ற பல்வேறு கருத்துக்களை விளக்கி பேசினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் ஜெயந்திதேவி வரவேற்றார். இதில் மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞானாம்பிகை நன்றி கூறினார். 



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி இளங்கலை பொருளாதாரம் வகுப்பு மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்

கடலூர்:

கடலூரில் பெரியார்  அரசுக் கலைக்கல்லூரி வகுப்பறைக்குள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் திடீரென நுழைந்து மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தைக் கவனித்தார்.

கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை 
(08/08/2013) உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வந்திருந்தார். அப்போது காலை 10.30 மணியளவில், கடலூர்  பெரியார் கலைக் கல்லூரிக்கு அமைச்சர் திடீரென நுழைந்தார். அங்கு வகுப்பறைகள் உள்ள வராண்டாவில் நடந்துச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இளங்கலை பொருளாதாரம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களோடு அமர்ந்து கொண்டு பாடம் கவனித்தார். பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம், சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவுப்பெற வேண்டும் என அறிவுரைக் கூறினார். அவருடன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு வரலாற்றுத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பொன் விழா ஆண்டு நிறைவு பெறுவதை  ஒட்டி  வரலாற்றுத் துறை சார்பில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 12, 2003 நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் குறித்து முன்னணி நாளேடுகளில் வந்த செய்திகளின் தொகுப்பு














Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - நிறைவு விழா

  பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா நேற்று மாலை (02.08.2013 - வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டின் துவக்கத்தையொட்டி, கல்லூரியின் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படுகின்றன, நிறைவு விழாவில் அது நூலாக வெளியிடப்படும். மேலும், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை ஆவணப்படுத்துகின்ற வகையில், இந்த இரு நாள் தேசியக் கருத்தரங்கில் சமப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்படும். ஒரிரு மாதங்களுக்குள்ளாகவே அப்பணி செய்து முடிக்கப்படும். மேலும், இது போன்ற தேசியக் கருத்தரங்குகளை கல்லூரியில் தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.   

       திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாப்பேருரை நிகழ்த்தினார்.

 அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம் நிலைபெற்றதற்கு அக்காலகட்டத்தில் அப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களின் தாராள வாணிபக் கொள்கையே காரணம். அக்கொள்கையின் காரணமாக அவர்கள் காலனியாதிக்கச் சக்திகளுக்கு கடற்கரையோரா நகரங்களில் வாணிபம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். அவ்வகையில் அனுமதி பெற்ற அயல்நாட்டவர் காலப்போக்கில் கடல்சார் வாணிபத்தையும், கடலையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு அனுமதியளித்த மன்னர்களே கடல்கடந்து பிறநாடுகளோடு வாணிபம் செய்வதற்கு காலனியாதிக்கச் சக்திகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசுக் கல்லூரியில் இது போன்ற தேசியக் கருத்தரங்குகள் நடத்தப்படுவது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகும். இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.     

     இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், கடலூரின் காலனியாதிக்க வரலாறு குறித்த 35 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

    கருத்தரங்கில் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.      

    நிறைவுவிழா நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார்.        

    நிறைவாக, தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.   

    பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்க நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.    

 தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 1.  கடலூரின் காலனியாதிக்க கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

2. கடலூரின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் கடலூர் வரலாற்று ஆவண மையம் ஒன்றை கடலூரில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

3. வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான புனித டேவிட் கோட்டை பராமரிப்பிலாத நிலையில் இருக்கிறது. அதனைப் புனரமைக்க வேண்டுமென்றும், அங்கு வரும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோட்டை குறித்த வரலாற்றைக் காட்சிப் படுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும், மத்திய அரசின் தொல்லியல் துறையையும் கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பார்க்க: 

 



Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - துவக்கவிழா

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடத்துகின்ற தேசியக் கருத்தரங்கத்தின் துவக்க விழா இன்று (01.08.2013 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது.      

    பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

கடலூர் நகரின் வரலற்றுச் சிறப்பு மிக்க நகரம். சோழமண்டலக் கடற்கரையில், 1748 முதல் 1752 வரையில் அதுவே ஆங்கிலேயர்களில் தலைமையிடமாக இருந்தது. கெடிலம் நதிக்கரையில் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள செயின்ட் டேவிட் கோட்டை இன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தின் எச்சமாக இருக்கிறது. 1756-ல் ராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1653-ம் ஆண்டு இந்து வணிகர் ஒருவரால் கட்டப்பட்ட இக்கோட்டை, 1677-ல் சிவாஜி செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு மராத்தியர்களில் கைக்குப் போனது, பின்னர் ஆங்கிலேயர்கள் அதனை வாங்கினர். அதற்கென ஒரு புதிய முறையைக் கையாண்டனர். டேவிட் கோட்டையிலிருந்து கடலூர் நகரத்தை நோக்கி பல திசைகளிலும் பீரங்கியால் சுட்டனர். குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். அவ்வாறு குண்டு விழுந்த இடங்கள் இன்றும் குண்டு உப்பலவாடி, குண்டுசாலை, குண்டுசாவடி என்றே அழைப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை உருவாக்கினர்.        

தேசியக் கருத்தரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் கருத்தரங்கத் துவக்க விழா உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      கடல்சார் வரலாறு என்பது கடலில் மனிதனுடைய நடவடிக்கைகளின் பற்றிய ஆய்வாகும். அதில் தேசிய மற்றும் பிராந்திய வரலாறுகள் முதன்மையானதாக இருந்தபோதிலும், பெரும்பாலும் வரலாற்றின் ஒரு பரந்துபட்ட கருத்தியல் ரீதியிலான கூறுபாடு உள்ளடக்குகின்ற ஒரு உலகளாவிய அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றது. ஒரு கல்வி சார்ந்த பாடமாக, துறைகளின் தரநிலை எல்லைகளைத் தாண்டி பெரும்பாலும் சமுத்திரங்கள், கடல்கள், மற்றும் உலகின் முக்கிய நீர்வழிகள் என மனித குலத்தின் பல்வேறு உறவுகளைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறது. கடல்சார் வரலாறு கப்பல்கள், சரக்குப் போக்குவரத்து, கடல் பயணம் மற்றும் மாலுமிகளை சம்பந்தப்பட்ட கடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து விளக்கமளிக்கிறது. கடல்சார் வரலாறு காலஓட்டத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் வணிகம் மற்றும் வர்த்தகமே பெருமளவில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, சிந்து சமவெளி நாகரிக இடமான லோத்தலில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்றது. எகிப்து, உர் மற்றும் மெசபடோமியா மற்றும் சிந்து நாகரிங்களுக்கு இடையே தீவிர வணிகரீதியான உறவுகள் இருந்தன. சங்ககாலத்தில் சங்ககால மன்னர்கள் இலங்கையின் மீது தொடர்ந்து போர் தொடுத்து அங்கிருந்து கைதிகளைக் கொண்டுவந்து காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அவர்களைப் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தமிழர்கள் அடிப்படையில் செல்வத்தைச் சம்பாதிக்க ஆழ்கடல்களைப் பயன்படுத்தினர். “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது தமிழ் பழமொழி ஆகும். இந்தக் கருத்தரங்கு சில முக்கிய அம்சங்களை முன்னிலைப் படுத்துகிறது. முதலில் உள்ளூர் வரலாறே அடிப்படையில் அதன் முக்கியக் கருப் பொருளாக இருக்கிறது, அதாவது, ஐரோப்பிய குடியேற்றங்கள் மற்றும் காலனியாதிக்கத்தின் போது கடலூரின் பங்கு. இரண்டாவதாக, இரண்டாவதாக, ஐரோப்பிய கடல்வழி வர்த்தகத்தின் தன்மையின் மீது அது கவனம் செலுத்துகிறது. காலனி ஆதிக்க கால கடல் வணிகமானது விவசாயத்தை வர்த்தகமயமாக்குகின்ற செயல்முறையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவிற்கு பருத்தி துணிகளை இறக்குமதி செய்தல். இந்த கருத்தரங்கமானது, துறைமுகங்கள் ஏற்படுத்தப்படுதல், வர்த்தக வழிகள், வானிலையை கண்காணித்தல், கப்பல்கட்டுமானம், புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் போன்ற ஒரு பரந்த நோக்கெல்லையைக் கொண்டிருக்கிறது. புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தில் ஆதரவில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் விவாதங்கள் ஒரு தொகுக்கப்பட்ட புத்தக வடிவில் வெளியிடப்படவேண்டும். தென் இந்திய கடல்சார் வரலாறு குறித்து அதிலும் குறிப்பாக தமிழ்நாடு குறித்து மிகச் சில படைப்புகளே இருக்கின்றன. இந்நிலையில் இந்தக்கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள், உரைகள், விவாதங்கள் நிரந்தரமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.         

      இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், “கடற்கரையை அளவிடுதலில் சோழ மண்டலக் கடற்கரை அனுபவங்கள்”, “காலனியாதிக்க காலத்தில் கடலூர் துறைமுக இஸ்லாமிய கடல் வணிகர்களும், தென்கிழக்காசிய வணிக வலைப்பின்னலும்”, “ஆங்கிலேயர் ஆட்சியில் கடலூர் நகரமயமாதலும், ஜவுளி வணிகமும்”, “பதினெட்டாம் நூற்றாண்டில் தென்கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு ஆசியாவுடன் பாண்டிச்சேரியின் கடல்சார் வாணிபம்”, “கடலூரில் கடல்சார் வாணிபம்”, “டென்மார்க் காலனியான தரங்கம்பாடியில் சமயம் மற்றும் கல்வி”, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெப்ப மண்டல சூறாவளிகளும் கடலூர் மாவட்டத்தில் அதன் தாக்கமும்” “ஆரம்பகாலத் தமிழகம் குறித்த அயல்நாட்டவரின் குறிப்புகள்”, “மத்திய காலத்தில் பழவேற்காடு மற்றும் நாகபட்டினம் துறைமுகங்கள்”, “வாணிபமும் சமூகமும்”, “சதுரங்கப்பட்டிணம் போர்”, “சோழமண்டலக் கடற்கறையின் கடல்சார் வாணிபம்”, “கர்நாடகத்தில் ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல்களும், கடலூரில் அதன் தாக்கமும்”, “தரங்கம்பாடி மீதான டென்மார்க்கின் மேலாதிக்கம்”, “மேலாதிக்கம் செலுத்துதலில் உள்ளூர் மக்களைப் பயன்படுத்துதல்”, “சோழ மண்டலக் கடற்கரையில் ஐரோப்பிய வாணிபக் கம்பெனிகளின் போட்டி”, “காலனியாக்க சக்திகளும் அவற்றின் கொள்கைகளும்”, “கடலூரில் காலனியாதிக்க கட்டடக்கலை”, “சாதி மற்றும் மதத்தின் மீது பிரெஞ்சு காலனியாதிக்கக் கொள்கைகளின் தாக்கம்”, “பரங்கிப்பேட்டையில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்க வாணிபம்”, “கடலூர் முற்றுகை”, “சென்னைத் துறைமுகத்தின் வரலாற்று முக்கியத்துவம்”, “கொற்கை, காயல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களின் வளர்ச்சி”, “பறையர்களும், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை இராணுவமும்”, “மேஜர் ஸ்டிஞ்சர் லாரன்சும், புனித டேவிட் கோட்டை பாதுகாக்கப்படலும்”, “கடலூர் பிராந்தியத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி” உள்ளிட்டவை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.        

          கருத்தரங்கில் முனைவர் கே. ஜான்குமார், பிஷப் ஹீபர் கல்லூரி, முனைவர் என். அதியமான், தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ். ராஜவேலு, தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் எஸ்.என். நாகேஸ்வர ராவ், சர் தியாகராயர் கல்லூரி, முனைவர் எஸ். பாபு, காஞ்சி மாமுனிவர் முதுகலைப் படிப்புகள் மையம், புதுச்சேரி, முனைவர் கே. கன்னையா, கடலூர், முனைவர் எம்.மாணிக்கம், அவ்வையார் கல்லூரி, காரைக்கால், முனைவர் ஜே. ராஜா முகம்மது, முன்னாள் அருங்காட்சியக துணை இயக்குநர், தமிழ்நாடு, முனைவர் என். அழகப்பன், முதல்வர், செட்டிநாடு கல்லூரி, முனைவர் எஸ். ஜெயசங்கர், முதல்வர், ஸ்ரீ வாசவி கல்லூரி, முனைவர் ஜூலியஸ் விஜயகுமார், பொறையார், முனைவர் கே.ஆர். சங்கரன், ஏ.வி.சி. கல்லூரி, முனைவர் டி. அசோகன், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஒய். சீனிவாச ராவ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், முனைவர் ஜே. துர்காலட்சுமி, பதிவாளர், நானி பல்கிவாலா மத்தியஸ்த மையம், சென்னை, செந்தில்குமரன், ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி உள்ளிட்ட புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். கருத்தரங்க விவாதம் 9 அமர்வுகளில் நடைபெறுகிறது.        

      முழுவதும் புது தில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக நிதியுதவியுடன் நடத்தப்படுகின்ற இந்த தேசியக் கருத்தரங்கத்தின் கருத்தரங்க விவாதங்கள் கருத்தரங்கம் நிறைவுற்ற பின்னர், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒரு புத்தகமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.         

   சுமார் 350 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். 

    நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். நிறைவாக, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.     

     பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கத் துவக்கவிழா துவங்கியது.

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

 கடலூர்  பெரியார் கலைக் கல்லூரியில் முதுகலைப்  பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூர்  பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்.  உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  விண்ணப்பத்தின் விலை ரூ.42.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்  பிரிவினைச் சார்ந்த  மாணவர்கள் சாதிச் சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP