பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி
கடலூர்:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி இன்று 26/08/2013 பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டுக்கான போட்டிகள் இன்று 26/08/2013 தேதி காலை 9 மணிக்கு, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடக்கிறது. போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பரிந்துரை செய்யப்படுவர். இப்போட்டிக்கான கடிதங்கள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய படிவத்தில் முதல்வரின் பரிந்துரையுடன், ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அல்லது கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கைவேந்தன் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக