தமிழாழிக் கொற்கை வேந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழாழிக் கொற்கை வேந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவா் சோ்க்கைக்காண வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கடலூர் பெரியார்கலைக் கல்லூரியில் 2015 ஜனவரி பகுதிக்கான (January Session-2015) முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தகுதியுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முனைவர்பட்ட ஆய்வு (பிஎச்.டி) மேற்கொள்ளத் தமிழ்த்துறை மற்றும் தாவரவியல் துறையில் முழுநேரம் மற்றும் பகுதிநேரங்களிலும் வணிகவியல் துறையில் பகுதிநேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவர் சேர்க்கையானது திருவள்ளுவர் பல்கலைக் கழக முனைவர் பட்டமாணவர் சேர்க்கைவிதி முறைகளின்படி நடைபெறும். விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்துசேரக் கடைசிநாள் 10.12.2014. மேலும் விபரங்களுக்குக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட துறைத் தலைவர்களையோ நேரில் அணுகித் தெரிந்துகொள்ளலாம்.


தினமணி-10.11.2014
 பெரியார் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு
கடலூர் அரசு பெரியார் கலை, அறிவியல் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி பகுதிக்கான, முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி.) படிப்புக்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தாவரவியல் துறையில் முழு நேரம் மற்றும் பகுதி நேரங்களிலும், வணிகவியல் துறையில் பகுதி நேரத்திலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரிக்கு வந்து சேர வரும் டிசம்பர் 10ஆம் தேதி கடைசி நாள்.
மேலும், விவரங்களுக்கு கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவர்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.



தினமலா்  10.11.2014 திங்கள் கிழமை
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாநில அளவிலான தமிழ் கருத்தரங்கு 29.01.2014 அன்று நடைபெற்றது.

29.01.2014 (புதன்கிழமை) அன்று  நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.  தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்  கொற்கை வேந்தன் வரவேற்றார். பேராசிரியர் அர்த்தநாரி அறிமுக உரையாற்றினார்.

புதுச்சேரி மாநில தமிழ் சங்கத் தலைவர் முத்து, கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். "சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும், நாட்டுப்புற மீனவர் பாடல்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொடக்க விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 30 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கு 30.01.214 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைந்தது.











Read more...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் மாநில அளவிலான செம்மொழித் தமிழ் கருத்தரங்கம் வருகிற 29ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான இந்த செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களும் நாட்டுப்புற மீனவர் பாடல்களும் எனும் தலைப்பில் நடைபெறுகிறது. இக் கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்குகிறது. 30-க்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கவுள்ளனர். கருத்தரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முத்துவேலு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் முனைவர் மகாலிங்கம் சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றுகிறார். கருத்தரங்கின் தலைவராக கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளராக தமிழ்த் துறை தலைவர் தமிழாழிக்கொற்கை வேந்தன் செயல்பட உள்ளனர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி

கடலூர்:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி இன்று 26/08/2013 பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. 

இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: 

 தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் இன்று 26/08/2013 தேதி காலை 9 மணிக்கு, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடக்கிறது. போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பரிந்துரை செய்யப்படுவர். இப்போட்டிக்கான கடிதங்கள் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய படிவத்தில் முதல்வரின் பரிந்துரையுடன், ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அல்லது கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கைவேந்தன் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 2 பிப்ரவரி, 2013

கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பெரியார் கலைக் கல்லூரி மாணவி இரண்டாமிடம்

கடலூர் :

        தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான படைப்பாற்றல் போட்டிகளில் மாணவிகளே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

        தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் பொருட்டு தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி கடலூர், பெரியார் அரசு கல்லூரியில் நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் 18 கல்லூரிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

         கவிதைப் போட்டியில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. கல்லூரி சுகந்தி, கடலூர் கந்த சாமி நாயுடு மகளிர் கல்லூரி தமிழ்ச்செல்வி, கட்டுரைப் போட்டியில் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி சுதா, தொழுதூர் ஆறுமுகம் கலைக் கல்லூரி ராதிகா, பேச்சுப் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி நந்தினி, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவி சங்கீதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

         மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) மனோகரன், போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். முதல் பரிசாக 10, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7, 000 ரூபாய் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பேராசிரியர் குமரன் மற்றும் பழனிவேலுசெய்திருந்தனர்.போட்டியில் வென்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா நன்றி கூறினார்.

. Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 31 ஜனவரி, 2011

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மாநில கருத்தரங்கம்

கடலூர்:
 
           செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் மாநில கருத்தரங்கம் பெரியார் கலைக்கல்லூரி அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

            தமிழ்த்துறை தலைவர் தமிழாழிக் கொற்கை வேந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அர்த்தநாரி கருத்தரங்கு அறிமுகவுரை ஆற்றினார். கருத்தரங்கை அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது
அய்யப்பன் எம்.எல்.ஏ பேசியது:-

              தமிழுக்காக கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி மிக சிறப்பாக நடத்தினார். செம்மொழி மாநாட்டினால் ஒட்டுமொத்த உலகமும் தமிழ்மொழி சிறப்பையும், பெருமையும் தெரிந்து கொண்டதோடு தமிழின் நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டது. தமிழ்மொழி சிறப்பை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் முழு அளவிலும் மற்றும் நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெரும் முயற்சியோடு இதுபோன்ற கருத்தரங்கு நடத்தி வருகி றார்கள். இதுமட்டுமின்றி ஆண்டு தோறும் செம்மொழி மாநாடு நடைபெறும் என முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

             தமிழ்மொழி மேலும் சிறப்படைவதற்கு கலைஞர் செம்மொழி அறக்கட்டளை உருவாக்கி அதற்கு வைப்பு நிதியாக எனது சொந்த பணம் ரூ.1 லட்சம் அளித்துள்ளேன். இதன் பயனாக மாணவர்களாகிய நீங்கள் சிறந்த முறையில் கல்வி கற்று தமிழ்மொழியின் சிறப்பை மேலும் வளர்க்க வேண்டும். இதற்காக என்னால் முடிந்தவரைக்கும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

           ஆங்கிலத்துறை தலைவர் நடராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் காந்திமதி, கணிதத்துறை தலைவர் முனைவர் ஞானசேகரன், விலங்கியல் துறைத்தலைவர் ஜெயந்திதேவி, தாவரவியல் துறை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் பாஸ்கரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இணைப்பேராசிரியர் குமரன் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP