கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடந்தது.
மாவட்ட உணவுப் பொருள்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் க.ரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், என்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாணவர்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், ஆலோசகர் கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் ஆகியோர் நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.