கடலூர் பெரியார் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு
கடலூர் :
கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவருக்கு காங்.,சார்பில் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட 21 கல்லூரிகளில் இருந்து 2,300 மாணவர்கள் காங்., உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தலைவர், செயலர் உள்பட 10 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் கடலூர் மாவட்ட மாணவர் காங்., தலைவராக தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியைச் சேர்ந்த கலையரசன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நான்கு பேர் பொதுச் செயலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கலையரசனுக்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் அலமு தங்கவேல், ஜான் சதீஷ், ராமநாதன், ரகுபதி, கார்த்திக், சிவக்குமார், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக