கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் உதவித்தொகை குறைந்ததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கடலூர் :
கடலூர் கல்லூரியில் ஆதி திராவிடர் மாணவர்கள் உதவித் தொகையை வாங்க மறுத்து ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பொருளியல் மூன்றாமாண்டு மாணவர்கள் 29 பேருக்கு வர வேண்டிய தலா 2,850 ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக 2,130 ரூபாய் மட்டுமே வந்தது. மாணவர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் கல்லூரியிலிருந்து அனுப்பிய பட்டியலில் குறிப்பிட்ட 29 மாணவர்களுக்கு எஸ்.சி., என குறிப்பிடுவதற்கு பதிலாக எஸ்.சி.சி., (எஸ்.சி.,கிறிஸ்தவர்) என தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதனை கண்டித்து மாணவர் ரவீந்திரன் தலைமையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதிதிராவிட நலத்துறை உதவி கணக்கு அதிகாரி செல்வம் கூறுகை யில்,
"ஆன்லைன் பட்டியலில் தவறுதலாக அனுப்பப்பட்டதால் அதற்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி சார்பில் கடிதம் கொடுத்துள்ளனர். உடன் மாணவர்களுக்கு சேரவேண்டிய தொகை அனுப்பப்படும்' என்றார்.
1 கருத்துகள்:
வணக்கம்
தங்கள் கல்லூரி போல் தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரிகளும் இணையதளங்களில் செய்திகளை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
http://muelangovan.blogspot.com/
கருத்துரையிடுக