பேராசிரியர் சேதுராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் சேதுராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மார்ச், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துடன் இணைந்து வரலாற்றை மறுகட்டமைத்தல்: தரம் சார்ந்த மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியப் பயிலரங்கம்

பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 7 & 8 மார்ச் ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “வரலாற்றை மறுகட்டமைத்தல்: தரம் சார்ந்த மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் நடத்திய தேசியப் பயிலரங்கின் துவக்க விழா 07.03.2014 அன்று காலை 10 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

 பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தனது உரையில் பல்வேறு வரலாற்று அணுகுமுறைகளைப் பட்டியலிட்ட அவர், அனைத்து அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, தரம்சார்ந்தும், தரவு சார்ந்தும் வரலாற்று ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார். மேலும், என்ன நடந்தது? என்பதை விட, ஏன் நடந்தது? என்ற கேள்வி மிக முக்கியமானது என்றார். 

 தேசியப் பயிலரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் பயிலரங்க துவக்க விழா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, சார்பு இல்லாத நிலையில் வரலாறு எழுதப்படவேண்டும். வரலாற்றாசிரியர் எத்தகைய அணுகுமுறைகளைப் என்றாபயன்படுத்தினாலும், உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டும் என்றார். 

 08.03.2014 அன்று மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்ற பயிலரங்க நிறைவு விழாவில் முனைவர் எஸ்.கே. அருணி, துணை இயக்குநர், இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தென் பிராந்திய மையம், பெங்களூரு, அவர்கள் பயிலரங்க நிறைவு விழா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வரலாறு பயில்கின்ற மாணவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகள் குறித்து விளக்கியதோடு, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு இந்திய வரலாற்றாய்வுக் கழகம் வழங்குகின்ற உதவித்தொகைகள் பற்றி எடுத்துரைத்தார். 

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தேசியப் பயிலரங்கில், புதுதில்லி இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள் “புள்ளியியல் அடிப்படையிலான வரலாறு” என்ற தலைப்பிலும், பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் “பல்வேறு வரலாற்று அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதன் நன்மைகள்” என்ற தலைப்பிலும், புதுச்சேரி மொழியியல் மற்றும் கலாச்சார மைய இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்கள் “இடப்பெயர்ச்சிக் கதைகள் மூலம் இனவழி வரலாற்றைக் கட்டமைத்தல்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதாரம், வணிகவியல் மற்றும் நிதியியல் பள்ளியின் தலைவர் முனைவர் எஸ். அய்யம்பிள்ளை அவர்கள் “தரவு சார்ந்த வரலாற்று அணுகுமுறை” என்ற தலைப்பிலும், திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் மேநாள் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் கே. சூரியமூர்த்தி “அடித்தள வரலாறு” என்ற தலைப்பிலும், சென்னைப் பல்கலைக்கழக பாதுகாப்பு மற்றும் யுத்ததந்திர ஆய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். உத்தம் குமார் ஜமதக்னி அவர்கள் “இராணுவ வரலாற்றை மறுகட்டமைத்தல்” என்ற தலைப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். பி. சக்திவேல் அவர்கள் “ஜனநாயகமும் நிறைவில்லா நிலையும்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மேலாண்மைத்துறை தலைவர் முனைவர் மு. இரவிச்சந்திரன் அவர்கள் “சுற்றுச்சூழல் வரலாற்றின் பொருத்தப்பாடு” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த. அசோகன் அவர்கள் “வரலாற்றியமும் இந்திய வரலாற்று வரைவியலும்” என்ற தலைப்பிலும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் கே. விஜயா அவர்கள் “பெண்ணிய ஆய்வின் இயல்பும் முறைகளும்” என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஒய். சீனீவாச ராவ் அவர்கள் “இந்தியாவில் அடித்தள வரலாற்று ஆய்விற்கான சாத்தியங்களும், சவால்களும்” என்ற தலைப்பிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். 

 பெரியார் கலைக்கல்லூரியில் இருந்தும், தமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்தும் சுமார் 400 பங்கேற்பாளர்கள், மூத்த அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார். 

இதில், கல்லூரி மாணவர்கள், மூத்த வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, தேசியப் பயிலரங்கின் இயக்குநரும், பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.


வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறைத் தலைவர் வி. ராயப்பன்


சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


தேசியப் பயிலரங்கத்தை குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த, புது தில்லி, இந்திய வரலாற்று ஆய்வுக் கழக உறுப்பினரும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக கலைப்புல முதல்வரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்கள் பயிலரங்க துவக்க விழா உரை நிகழ்த்துகிறார்


பயிலரங்க நிறைவு விழா உரை நிகழ்த்திய இந்திய வரலாற்று ஆய்வுக் கழக தென் பிராந்திய மைய இயக்குநர் முனைவர் எஸ்.கே. அருணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள்


பயிலரங்கில் பங்கேற்றோருக்கு நன்றி கூறுகிறார் பயிலரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 6 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர்

கடலூர் :
       
            கடலூர் அரசு கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். 

           தமிழக வரலாற்றுப் பேரவையில் ஆண்டு கருத்தரங்கு ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் கடந்த 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடந்தது. இக்கருத்தரங்கில் கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர்கள் பிரபா, தெய்வாம்சம், விஜயலட்சுமி, சேதுராமன் ஆகியோர் "தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், "பெண்களும் அவர்களின் விவசாயப் பணிகளும்', "புதுச்சேரி தமிழ் சமூகத்தின் மீது இலக்கிய சங்கங்களின் தாக்கம்' கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்', "ஹிலாரி கிளிண்டனின் இந்தியா வருகையும் இந்திய - அமெரிக்க உறவுகளின் மீது அதன் தாக்கமும்' என்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர். 

               கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் செல்வமுருகன், முத்தமிழ்ச்செல்வன், சுவாமிமலை, ஆனந்தராஜ் ஆகியோர் துறை பேராசிரியர் காந்திமதி வழிகாட்டுதலுடன் முறையே திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுச் செய்திகள், வில்லியனூர் காமீஸ்வரர் கோவில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர். 

                கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வரலாற்றுத் துறை மாணவர்களை கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, வரலாற்றுத் துறை தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் ராயப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Read more...

ஞாயிறு, 5 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. முனைவர் க. காந்திமதி, M.A.,M.Phil.,B.Ed.,Ph.D., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.  

2. திரு. இராயப்பன், M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

3. திருமதி. சி. பிரபா, M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

4. திருமதி. தி. சிவகாமசுந்தரி, M.A.,M.Phil.,M.L.I.S., உதவிப் பேராசிரியர்.

5. முனைவர். இ. விஜயலட்சுமி, M.A.,M.Phil.,Ph.D. உதவிப் பேராசிரியர்.

6. திரு. சொ. ரங்கராஜு,  M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர். 

7. முனைவர். நா. சேதுராமன், M.A.,Ph.D. உதவிப் பேராசிரியர்.


காலிப் பணியிடம் - ஒன்று

Read more...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உளவியல் துறை கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர் : 

           கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். 

            சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் முதல் அமர்விற்கும், திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியர் தனிஸ்தாஸ் இரண்டாம் அமர்விற்கும் தலைமை வகித்தனர். நிறைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னப்பன், அந்தோணிராஜ், ஜெயராஜ், ரூபி வயலட்ராணி, திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி செய்திருந்தனர்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP