கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2ம் நாளாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
கடலூர் :
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ஆதி திராவிடர் மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பொருளியல் மூன்றாமாண்டு ஆதிதிராவிடர் மாணவர்கள் 29 பேருக்கு வர வேண்டிய தலா 2,850 ரூபாய் உதவித் தொகைக்கு பதிலாக 2,130 ரூபாய் மட்டுமே வந்தது.
மாணவர்கள் முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் கல்லூரியிலிருந்து அனுப்பிய பட்டியலில் குறிப்பிட்ட 29 மாணவர்களுக்கு எஸ்.சி., என குறிப்பிடுவதற்கு பதிலாக எஸ்.சி.சி., (எஸ்.சி.,கிறிஸ்தவர்) என தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டித்து ஆதி திராவிடர் மாணவர்கள் கடந்த 4ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் நேற்று இரண்டாம் நாளாக ஆதி திராவிட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக