கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் பங்கேற்ப்பு
சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறை சார்பில் "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் சர்வதேச வேதியியல் ஆண்டு - 2011 முன்னிட்டு "நம் வாழ்க்கையில் வேதியியல்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் துவக்கி வைத்தார். பூம்புகார் கலைக்கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி., கலைக்கல்லூரி, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சிப்பாடி திருவள்ளூவர் கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தன்று துணைவேந்தர் ராமநாதன் பரிசு வழங்குகிறார். போட்டி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கபிலன், கோபாலகிருஷ்ணன் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக