திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர்.
விருத்தாசலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரி அணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.
கால்பந்து போட்டி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே கால்பந்து, கபடி போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் இரு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 40 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் வரை பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் திருப்பத்தூரில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளது. இந்த போட்டியில் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அணிகளும் பங்கேற்கும். இதில் தேர்வாகும் அணி நவம்பர் இறுதியில் கேரளாவில் அனைத்திந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நிகழ்ச்சி
நேற்று விருத்தாசலத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கல்விக்குழு உறுப்பினர் மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கவாஸ்கர் வரவேற்றார். போட்டியை கல்லூரி முதல்வர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இன்றும், போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி பேராசிரியர்கள் மகேஷ், ரவி, ராஜமாணிக்கம், பாலு, தியாகலிசன், சாந்தகுமாரி, ஜானகி, பயிற்சியாளர் அறிவழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக மண்டல அளவிலான கால்பந்து போட்டி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூியில் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 14 கல்லூரி கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன.

இப்போட்டியில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியின் சார்பில் கிரிராஜ், விக்னேஷ், சந்துரு, கதிரேசன், அஜித்குமார் சங்கரையா, கிரி, செழியன், கிருஷ்ணராஜ், நந்தகுமார், மைக்கேல், ஜவஹர் மற்றும் நித்யானந்தம் ஆகிய 13 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று சான்றிழழ்களை பெற்று வந்தனர். இவ்விளையாட்டு வீரர்களில் கிரிராஜ் விக்னேஷ் மற்றும் கதிரேசன் ஆகிய 3 மாணவர்கள் பல்கலைகழக விளையாட்டு போட்டிக்;கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் பரிசுகள் வழங்கியும், கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கு.நிர்மல்குமார் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக