கடலூர் பெரியார் அரசு கல்லூரிக்கு மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு பெற்றது.
தினகரன் 08.11.2014 சனிக்கிழமை
கடலூரில் நடந்த அரசு விழாவில் நுகர்வோர் அமைப்புகள் வெளிநடப்பு
கடலூர், : கடலூரில் நடந்த அரசு விழாவில்,
பெயரளவில்
மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி நுகர்வோர் அமைப்புகள் விழாவை
புறக்கணித்தன.
ஐக்கிய நாடுகள்
பிரகடனத்தின்படி மார்ச் 15ம் நாள் உலக நுகர்வோர் உரிமை தினம் நடத்தப்பட
வேண்டும். பல்வேறு காரணங்களால் இவ்விழா நடத்தப்படாமல் நேற்று கடலூர் டவுன்ஹாலில்
விழா நடத்தப்பட்டது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்தின.
காலை 10
மணிக்கு
நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த விழா 11.20 மணிக்கு
துவங்கியது. தாமதமாக விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்,
வரவேற்புரை
நிகழ்ச்சி முடிந்ததும் சிறந்த பள்ளி கல்லூரி நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசு தொகை
வழங்கிவிட்டு விழா மேடையை விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.
விழா
அரங்கிலிருந்து திடீரென ஆட்சியர் சென்றதற்கு பெரும்பாலான நுகர்வோர் அமைப்புகள்
கண்டனம் தெரிவித்து விழாவை புறக்கணித்து அவர்களும் வெளியேறினர்.
உலக நுகர்வோர்
உரிமை தின விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வாழ்த்து செய்தி சொல்வது மரபாகும். அதனை
அவர் செய்யாமல் எந்த காரணத்தையும் கூறாமல், வந்த வேகத்திலேயே புறப்பட்டுச் சென்ற
ஆட்சியரின் நடவடிக்கை நுகர்வோர்களின் மனதை வேதனையடைய செய்து விட்டதாக கூறி
நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பினர் பொதுச் செயலாளர் நிஜாமுதீன் தலைமையில்
நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து விழா
நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தங்கவேலு
வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள்,
கடலூர்
கோட்டாட்சியர் டாக்டர் ஷர்மிளா, பொதுவிநியோகத் திட்டம் துணைப்பதிவாளர்
கமலக்கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல
மேலாளர் மணி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராஜா
உள்பட பலர் வாழ்த்துரையும் கருத்துரையும் வழங்கினர். பள்ளி கல்லூரி நுகர்வோர்
மன்றத்தின், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம
பகுதியினர் ஆகியோருக்கு இவ்விழாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறப்பாக
செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த நுகர்வோர் மன்றங்களுக்கு
பரிசுத்தொகைகளும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.
பரிசு பெற்ற
பள்ளி கல்லூரிகள்:கடலூர்
மாவட்டத்தில்
சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லூரி நுகர்வோர் மன்றங்களில் முதல்பரிசு கடலூர்
பெரியார் அரசு கல்லூரிக்கும், இரண்டாம் பரிசு கடலூர் தூய வளனார் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், மூன்றாம் பரிசு நெய்வேலி ஜவகர் அறிவியல்
கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.
பள்ளிகள் அளவில்
திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும்,
நடுவீரப்பட்டு
அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டாம் பரிசும், விருத்தாசலம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பள்ளி கல்லூரி நுகர்வோர்
மன்றங்களுக்கும் முதல் பரிசாக தலா ரூ.1500ம், இரண்டாம் பரிசாக ரூ. ஆயிரமும்,
மூன்றாம் பரிசாக
ரூ.500ம்
வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
நடத்த
போவதாக
அறிவிப்பு
கடலூரில் நேற்று
நுகர்வோர் குழு கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் நிஜாமுதீன்
தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் திட்டக்குடி முத்துசாமி,
விருத்தாசலம்
செந்தமிழ்செல்வம், சிப்காட் அருள்செல்வம்,
பண்ருட்டி
ராஜவேலு,
நெல்லிக்குப்பம்
பாலசுப்ரமணியம், அரசன்குடி ராமமூர்த்தி,
வடலூர்
கல்விராயர், வேம்பு, கீரப்பாளையம் மோகனா உள்ளிட்ட நுகர்வோர் சங்க
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நுகர்வோர்
தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும் ஆட்சியர் கலந்து கொள்வதில்லை. தொடர்ந்து
நுகர்வோர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து வருகிறார்.
நேற்றைய அரசு நுகர்வோர் விழாவிலும் மரபை மீறி இந்த அரசிற்கு அவப்பெயர் வருமாறு
ஆட்சியரின் நடவடிக்கை அமைந்திருந்தது. எனவே, ஆட்சியரின் நுகர்வோர் விரோத போக்கை கண்டித்து
வரும் 12ம் தேதி கடலூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,
என்பது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை
தினத்தந்தி 08.11.2014 சனிக்கிழமை |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக