உலக சுற்றுலா தினத்தையொட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை செய்தனா்.
1. தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை
குப்பை தொட்டி
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் கடற்கரை
உள்ளது. இந்த சுற்றுலா தலத்துக்கு பொழுதுபோக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள்
இங்குள்ள கடைகளில் உணவு பண்டங்களை வாங்கிச்சாப்பிட்டு விட்டு, பேப்பர்
தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை கடற்கரை மணல்பரப்பிலேயே வீசியெறிகிறார்கள்.
ஏனெனில் இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி
சார்பில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும்
ஒரு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல்பரப்பெங்கும்
குப்பைகளாக காட்சி அளித்தது.
தூய்மை படுத்தும் பணி
இந்த நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ்
சுற்றுலாத்துறையும், பெரியார் அரசு கலைக்கல்லூரியும் இணைந்து
வெள்ளிக்கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியை நேற்று மேற்கொண்டனர்.
இந்த பணியை உதவி கலெக்டர் ஷர்மிளா தொடங்கி
வைத்தார். இதில் அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள்
சுமார் 250 பேர் கலந்து கொண்டு வெள்ளிக்கடற்கரை மணல்
பரப்பில் கிடந்த குப்பைகளை சாக்குப்பைகளில் பொறுக்கி அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார்
கலைக்கல்லூரி முதல்வர் விசுவநாதன், நாட்டுநலப்பணித்திட்ட
அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி 29.10.2014 புதன்கிழமை
2.தினமணி 31.10.2014 வெள்ளிக்கிழமை
சில்வர்
பீச்சில் தூய்மைப் பணி: கோட்டாட்சியர்
தொடங்கி வைத்தார்.
தூய்மை
இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் சில்வர் பீச்சை
தூய்மைப் படுத்தும் பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச்சுக்கு
பொழுது போக்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள் இங்குள்ள கடைகளில் உணவுப்
பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பேப்பர் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பை போன்றவற்றை
கடற்கரை மணல் பரப்பிலேயே வீசியெறிகின்றனர்.
இங்கு குப்பைகளை போடுவதற்காக நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. பூங்கா சுற்றுச்சுவர் அருகே மட்டும் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணல் பரப்பெங்கும் குப்பைகளாக காட்சி அளித்தது.
இந்நிலையில், உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையும், பெரியார் அரசு கலைக் கல்லூரியும் இணைந்து சில்வர் பீச்சை தூய்மைப் படுத்தும் பணியை புதன்கிழமை மேற்கொண்டனர். இந்த பணியை கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா தொடங்கி வைத்தார். இதில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டு சில்வர் பீச் மணல் பரப்பில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
சுற்றுலா அதிகாரி தமிழரசி, பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், வட்டாட்சியர் செழியன், நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி வீரச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக