கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழு வருகை ஜனவரி 8-10 (2015) -NAAC Peer Team Visit
கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தர ஆய்வு செய்வதற்காக தேசியதரச்சான்று நிர்ணயக் குழுவினால் நியமிக்கப்பட்ட 3 பேராசிரியர்கள் கொண்ட தேசிய தரச்சான்று நிர்ணயக்குழு (NAAC Peer Team Visit) வருகின்ற 2015 ஜனவரி 8-ம் தேதி வியாழக்கிழமை அன்று கல்லூரிக்கு வருகைதந்து 08-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை மூன்று நாட்கள் கல்லூரியின் தரத்தினை ஆய்வுசெய்து தேசிய தரச்சான்றினை வழங்கவுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரியானது பல்கலைக்கழகமாக மாறுவதற்கான அனைத்து அடிப்படை தகுதிகளையும் பெற்றுள்ளது. பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டினை கொண்டாடிவருகின்ற இவ்வேளையில் தமிழக அரசு இக்கல்லூரியை முதல்தரநிலை (Grade -I) கல்லூரியாக கடந்த மே 2014-ல் தரம் உயர்த்தி அறிவித்துள்ளது.
எனவே உயர்நிலை தேசிய தரச்சான்று பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தினத்தந்தி 05.01.2014 |
jpdkyh;
06.01.2014
|
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக