வியாழன், 7 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

கடலூர் : 

        கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

           கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய தொகுதி ஓட்டுகளை கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக கல்லூரியில் ஒரு பகுதியில் உள்ள கட்டடத்தை முழுவதும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் நான்கு தொகுதிகளில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 13ம் தேதி ஓட்டுப்பதிவிற்கு பின்னர் இரவுக்குள் அனைத்து மின்னுணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் கொண்டு வந்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இதற்காக தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப் பெட்டியை பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறைக்கு மின் வசதி மற்றும் செங்கற்களால் ஜன்னல்கள் அடைக்கும் பணி என அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Read more...

புதன், 6 ஏப்ரல், 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர் பங்கேற்ப்பு

கிள்ளை : 

          சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
 
           சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேரமான். இவருக்கு கல்லூரி வளாகத்தில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் துணை பேராசிரியர் லோகராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தட்சணாமூர்த்தி, வடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தெய்வநாயகம், ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நடனம் முன்னிலை வகித்தனர்.
               அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பழனியப்பன், ராஜாராமன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் கதிர்வேல், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்.

Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

கடலூர் : 

         கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது. கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு இயக்குனர் பிறையோன் சிறப்புரையாற்றினார். பார்மெக்ஸ் கேரியர் அகாடமி தலைவர் குருநாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் அளித்தார். பேராசிரியர்கள் கண்ணன், வண்ணமுத்து வாழ்த்திப் பேசினர். செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பங்கேற்ப்பு

கிள்ளை : 

            சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். மாணவர் தமிழ் வரவேற்றார். உடற்கல்வித் துறை இயக்குனர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் லோகராஜன், பொருளியல் துறைத் தலைவர் விவேகானந்தன், உதவி பேராசிரியர்கள் அறிவழகன், அர்ச்சுனன், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
 
          கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன், அரிமா சங்கத் தலைவர் ரத்தினசபாபதி, பேராசிரியர் கண்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். குழு விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டத்தை கணிதவியல் மற்றும் பொருளாதாரத் துறை மாணவர்கள் பெற்றனர். தனித்திறன் போட்டியில் மாணவர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய விண்ணரசி சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை விரிவுரையாளர் மாதவி தொகுத்து வழங்கினார்.

Read more...

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

நூல் வெளியீட்டு விழா: கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு

கடலூர்:
           கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ, தமிழ் ஒளி இயக்க நிறுவனர் கதிர் முத்தையன் ஆகியோர் நிகழ்த்தினர். வளவ. துரையன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP