சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர் பங்கேற்ப்பு
கிள்ளை :
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சேரமான். இவருக்கு கல்லூரி வளாகத்தில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் துணை பேராசிரியர் லோகராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் தட்சணாமூர்த்தி, வடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தெய்வநாயகம், ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நடனம் முன்னிலை வகித்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் பழனியப்பன், ராஜாராமன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் கதிர்வேல், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் பாஸ்கர், சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி துணைப் பேராசிரியர் தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக