சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா: கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பங்கேற்ப்பு
கிள்ளை :
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். மாணவர் தமிழ் வரவேற்றார். உடற்கல்வித் துறை இயக்குனர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் லோகராஜன், பொருளியல் துறைத் தலைவர் விவேகானந்தன், உதவி பேராசிரியர்கள் அறிவழகன், அர்ச்சுனன், சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன், அரிமா சங்கத் தலைவர் ரத்தினசபாபதி, பேராசிரியர் கண்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். குழு விளையாட்டில் சாம்பியன்ஷிப் பட்டத்தை கணிதவியல் மற்றும் பொருளாதாரத் துறை மாணவர்கள் பெற்றனர். தனித்திறன் போட்டியில் மாணவர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய விண்ணரசி சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை விரிவுரையாளர் மாதவி தொகுத்து வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக